முழு முடக்கம் அமல்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரை

Added : மே 04, 2021
Share
Advertisement
புதுடில்லி:கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் முழு முடக்கத்தை அமல்படுத்த, உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.நாடு முழுதும், கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. ஆக்சிஜன், மருந்து, தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தாமாக முன்வந்து, உச்ச நீதிமன்றம் அதை வழக்காக பதிவு செய்து

புதுடில்லி:கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் முழு முடக்கத்தை அமல்படுத்த, உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

நாடு முழுதும், கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. ஆக்சிஜன், மருந்து, தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தாமாக முன்வந்து, உச்ச நீதிமன்றம் அதை வழக்காக பதிவு செய்து விசாரித்தது.

இந்த வழக்கில், நீதிபதிகள், டி.ஒய். சந்திரசூட், எல். நாகேஸ்வர ராவ், எஸ்.ரவீந்திர பட் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பு: கொரோனா வைரஸ், மேலும் பரவுவதை தடுக்க எடுத்துள்ள மற்றும் எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் தெரிவிக்க வேண்டும். தேவையான அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

வைரஸ் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ள, மக்கள் அதிக அளவில் கூடும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கலாம். தேவைப்பட்டால், முழு முடக்கத்தை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தலாம்.அதே நேரத்தில், ஏழை, எளிய மக்களின் பொருளாதார சூழ்நிலையையும் கவனிக்க வேண்டும். முழு முடக்கத்தை அறிவிப்பதற்கு முன், அவர்களுக்கு தேவையான வசதி, வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X