பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 'பைஸர்' தடுப்பூசி அனுமதியை விரைவுபடுத்த பேச்சு

Updated : மே 04, 2021 | Added : மே 04, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி : அமெரிக்காவின், 'பைஸர் - பயோஎன்டெக்' நிறுவனத்தின் தடுப்பூசியை, நம் நாட்டில் பயன்படுத்துவதற்கான அனுமதியை விரைவுபடுத்துவது குறித்து, மத்திய அரசுடன் அந்நிறுவனம் பேச்சு நடத்தி வருகிறது.அமெரிக்காவைச் சேர்ந்த, பைஸர் - பயோஎன்டெக் நிறுவனம் இணைந்து, கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசி, அமெரிக்கா உட்பட, பல்வேறு நாடுகளிலும் பயன்பாட்டில்

புதுடில்லி : அமெரிக்காவின், 'பைஸர் - பயோஎன்டெக்' நிறுவனத்தின் தடுப்பூசியை, நம் நாட்டில் பயன்படுத்துவதற்கான அனுமதியை விரைவுபடுத்துவது குறித்து, மத்திய அரசுடன் அந்நிறுவனம் பேச்சு நடத்தி வருகிறது.latest tamil newsஅமெரிக்காவைச் சேர்ந்த, பைஸர் - பயோஎன்டெக் நிறுவனம் இணைந்து, கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசி, அமெரிக்கா உட்பட, பல்வேறு நாடுகளிலும் பயன்பாட்டில் உள்ளது.


ஒப்பந்த அடிப்படை


அரசுகளுடனான ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே, பைஸர் தடுப்பூசிகள் வினியோகம் செய்யப்படும்' என, அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்தது. இந்நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளை, நம் நாட்டின் அவசரகால பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்ய, மத்திய அரசு கடந்த மாதம் அனுமதி அளித்தது. இதற்கிடையே, இந்திய தடுப்பூசி திட்டத்துக்கு, லாப நோக்கம் இன்றி, தடுப்பூசிகளை வழங்க தயாராக இருப்பதாக, பைஸர் நிறுவனம் அறிவித்தது.

இதையடுத்து, பைஸர் நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ஆல்பர்ட் பவுர்லா கூறியதாவது: அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க செய்வதே, கொரோனா தொற்று பரவலுக்கு முடிவு கட்டும் என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். துரதிர்ஷ்டவசமாக, பைஸர் தடுப்பூசி இந்தியாவில் பதிவு செய்யப்படவில்லை. ஆனாலும், பல மாதங்களுக்கு முன்பே, இது தொடர்பாக, இந்திய அரசிடம் விண்ணப்பித்து உள்ளோம். இந்நிலையில், பைஸர் தடுப்பூசியை இந்தியாவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பான அனுமதியை விரைவுபடுத்துவது குறித்து, அந்நாட்டு அரசுடன் பேச்சு நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news
இலவசம்


இதற்கிடையே, கொரோனா சிகிச்சைக்காக, பைஸர் நிறுவனம் தயாரித்துள்ள மருந்துகளை, இந்தியாவுக்கு அளித்து உதவ, அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.இதற்காக, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள வினியோக நிலையங்களில் இருந்து, 510 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகளை, இலவசமாக அந்நிறுவனம் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா
04-மே-202111:50:40 IST Report Abuse
Nemam Natarajan Pasupathy Bill gates who owns a big share in Pfizer has ly said that they should not transfer that technology to India. We can do with our own vcaccines and Sputnik. Let all Indians working for Microsoft protest against Bill gates for his anti India stand , if they call themselves as sons of this soil.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
04-மே-202110:29:57 IST Report Abuse
vbs manian உள்ளூர் ஊசி போதுமானதாக இல்லை. மோடி அரசு உடனே இந்த ஊசிக்கு அனுமதி கொடுக்க வேண்டும். பல மேலை நாடுகளில் புழக்கத்தில் உள்ளது. அனுமதி கொடுத்தால் பிடன் அரசும் இந்தியாவை கொஞ்சம் கருணையோடு பார்க்கும். ஊசி தயாரிப்பு தடைகள் நீங்கும்.
Rate this:
Cancel
04-மே-202109:02:11 IST Report Abuse
ஆரூர் ரங் PFIZER விண்ணப்பித்த போது மூன்று முறை மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து போதும இந்த நிறுவனம் வரவில்லை..வேறு பணக்கார நாடுகள் கூடுதல் விலை முன்பணம் கொடுத்தால் இங்கு ஆர்வம் காட்டவில்லை. மேலும் துவக்கத்தில் காங்கிரசு போன்ற கட்சிகள் தடுப்பூசிக்கே எதிர்ப்பு தெரிவித்ததால் அன்னிய நிறுவனங்கள் இங்கு ஆர்வம் காட்டவில்லை. சீரம் நிறுவனம் இரண்டாவது கட்ட சோதனையின்போதே பல நாடுகளுடன் அட்வான்ஸ் ஒப்பந்தமிட்டுவிட்டது. எதிர்ப்பு இருக்கும் இந்தியாவைவிட ஏற்றுமதி மேல் அல்லவா? நம்மிடம்😛 ஒற்றுமை இல்லாததும் தேவையற்ற தடுப்பூசி எதிர்ப்புப் பிரச்சாரம், முகக் கவசம் அணியாதது போன்றவைதான் இப்போதைய அவலத்துக்கு காரணம். சீன டுபாக்கூர் தடுப்பூசி 🤬இறக்குமதிகாக கம்யூனிஸ்ட் காங்கிரசும் முயன்றது கொடுமை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X