கர்நாடகாவில் 24 பேர் பரிதாப பலி

Added : மே 04, 2021
Share
Advertisement
பெங்களூரு:கர்நாடகாவின், சாம்ராஜ் நகர் மாவட்ட மருத்துவமனையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, 23 கொரோனா நோயாளிகள் உட்பட, 24 பேர் உயிரிழந்தனர். ஆனால், 'உயிரிழப்புக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு மட்டும் காரணம் அல்ல' என, மாநில அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநில தலைநகரான பெங்களூரு அருகே உள்ள, சாம்ராஜ் நகர்
 கர்நாடகாவில் 24 பேர் பரிதாப பலி

பெங்களூரு:கர்நாடகாவின், சாம்ராஜ் நகர் மாவட்ட மருத்துவமனையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, 23 கொரோனா நோயாளிகள் உட்பட, 24 பேர் உயிரிழந்தனர். ஆனால், 'உயிரிழப்புக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு மட்டும் காரணம் அல்ல' என, மாநில அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநில தலைநகரான பெங்களூரு அருகே உள்ள, சாம்ராஜ் நகர் மாவட்ட மருத்துவமனையில், நேற்று அதிகாலை ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது.மூச்சு திணறல்இதையடுத்து, அங்கு சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளில், 23 பேர் உட்பட, 24 பேர், மூச்சு திணறி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம், மாநிலம் முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திஉள்ளது.மாவட்ட துணை கமிஷனரை அழைத்து, இந்த சம்பவம் குறித்து, முதல்வர் எடியூரப்பா விபரங்களை கேட்டறிந்தார்.இது குறித்து, சாம்ராஜ் நகர் பா.ஜ., பொறுப்பாளரும், ஆரம்ப மற்றும் இடைநிலை கல்வி அமைச்சருமான சுரேஷ்குமார் கூறியதாவது:நேற்று முன்தினம் காலை முதல், நேற்று காலை வரை, அடுத்தடுத்து இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

சில மணி நேரங்களுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது உண்மை தான். மருத்துவ மனையில், 6,000 லிட்டர், திரவ மருத்துவ ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது. மைசூரில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் வந்து சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால், 24 பேர் உயிரிழந்ததற்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு மட்டுமே காரணமல்ல. அறிக்கைஅவர்கள் மருத்துவமனையில் எந்த நிலையில் அனுமதிக்கப்பட்டனர், அவர்களுக்கு இணை நோய்கள் இருந்ததா? எவ்வளவு தீவிரமான பாதிப்பு ஏற்பட்டு இருந்தது என்பது குறித்து தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும், முழு விபரம் தெரியவரும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சம்பவத்துக்கு, எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ''உயிரிழந்த அல்லது கொல்லப்பட்ட, 24 பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். இந்த அரசு விழித்துக் கொள்வதற்கு முன், இன்னும் என்னென்ன துன்பங்களை மக்கள் அனுபவிக்க வேண்டுமோ,'' என, காங்., - எம்.பி., ராகுல் தெரிவித்து உள்ளார்.

''அலட்சியத்திற்கு பொறுப்பேற்று, கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்,'' என, காங்., பொதுச் செயலர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார். ஆந்திராவில் 8 பேர் பலி!ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஹிந்துபூர் அரசு மருத்துவமனையில், நேற்று முன்தினம் மாலை முதல், நேற்று காலை வரை, கொரோனா நோயாளிகள் எட்டு பேர் உயிரிழந்தனர். ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக, இறந்தவர்களின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.

இதை, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஹிந்துபூர் மருத்துவமனையில், 140 ஆக்சிஜன் சிலிண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், ஆக்சிஜன் காலியாகும் போது, புதிய சிலிண்டர்கள் உடனடியாக மாற்றப்படுவதாகவும், அனந்தபூர் மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X