அரசியல் செய்தி

தமிழ்நாடு

ம.தி.மு.க.,வுக்கு மறுவாழ்வு

Added : மே 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:தமிழக சட்டசபை தேர்தலில் ம.தி.மு.க. நான்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2006க்கு பின் ம.தி.மு.க. - எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் சட்டசபைக்குள் நுழைகின்றனர்.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. சார்பில் ஆறு வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் மதுரை தெற்கு - பூமிநாதன், சாத்துார் - ரகுராமன், வாசுதேவநல்லுார் - சதன் திருமலைக்குமார், அரியலுார் - சின்னப்பா ஆகிய நான்கு பேர் உதயசூரியன்

சென்னை:தமிழக சட்டசபை தேர்தலில் ம.தி.மு.க. நான்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2006க்கு பின் ம.தி.மு.க. - எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் சட்டசபைக்குள் நுழைகின்றனர்.

தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. சார்பில் ஆறு வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் மதுரை தெற்கு - பூமிநாதன், சாத்துார் - ரகுராமன், வாசுதேவநல்லுார் - சதன் திருமலைக்குமார், அரியலுார் - சின்னப்பா ஆகிய நான்கு பேர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

தேர்தலில் போட்டியிடாமலும் சில தேர்தல்களில் வெற்றி பெறாமலும் போனதால் சொந்த சின்னமான பம்பரத்தை இழந்து 10 ஆண்டுகளாக சட்டசபையில் நுழைய முடியாமல் ம.தி.மு.க. தவித்தது. 2006 முதல் 2011 வரை அக்கட்சிக்கு எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். அதன்பின் தற்போது தான் வெற்றி கிடைத்திருக்கிறது.

அதற்கு காரணம் ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ 2006க்கு பின் மேற்கொண்ட கூட்டணி கணக்குகள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. கடந்த 2006 சட்டசபை தேர்தலில் தி.மு.க. அணியில் 35 தொகுதிகள் கேட்டு கிடைக்காததால் அ.தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு ஆறு இடங்களில் ம.தி.மு.க. வெற்றி பெற்றது.

அதன்பின் ம.தி.மு.க. - எம்.எல்.ஏ.க்களில் சிலர் தி.மு.க.வுக்கு தாவினர்.இதையடுத்து 2011 தேர்தலில் எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காததால் அ.தி.மு.க. அணியில் இருந்து ம.தி.மு.க. வெளியேறியது. தி.மு.க.வுடனும் நட்புறவு இல்லாததால் தேர்தலையே புறக்கணிப்பதாக வைகோ அறிவித்தார்.

பின் 2016 சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. கம்யூனிஸ்ட் வி.சி. - த.மா.கா. கட்சிகளுடன் சேர்ந்து தி.மு.க. - அ.தி.மு.க.வுக்கு மாற்றாக மக்கள் நல கூட்டணி உருவானது. இதில் 28 இடங்களில் ம.தி.மு.க. போட்டியிட்டு ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.எனவே 10 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.க்கள் இல்லாமல் இருந்த நிலையில் கட்சியினர் உற்சாகம் குறைந்து காணப்பட்டனர்.

அவர்களை திருப்திப்படுத்தும் வகையில் இந்த முறை கூட்டணி கணக்கில் கோட்டை விடாமல் தி.மு.க. கூட்டணியிலேயே வைகோ உறுதியாக இருந்தார்.அதன் பலனாக நான்கு ம.தி.மு.க. - எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் கோட்டையில் கால் பதிக்க உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-மே-202118:33:17 IST Report Abuse
ravi chandran கிளம்பினால் கெட்டது எல்லாம் மொத்தமாக கிளம்பும். அங்கொன்றும் இங்கொன்றுமாக நல்லது சில இருக்கும் பாவம் சட்டசபை வரலாறு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X