பொது செய்தி

இந்தியா

ஏப்ரல் மாதத்தில் ஏற்றுமதி மூன்று மடங்கு அதிகரிப்பு

Updated : மே 04, 2021 | Added : மே 04, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி, கடந்த ஏப்ரல் மாதத்தில், மூன்று மடங்கு அதிகரித்து, 2.24 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நடைபெற்றுள்ளது. இதற்கு பொறியியல் பொருட்கள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், பெட்ரோலிய பொருட்கள் ஆகிய துறைகளில், அதிகளவு ஏற்றுமதி நடைபெற்றது காரணமாக அமைந்துள்ளது.இது குறித்து, வர்த்தக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த ஆண்டு ஏப்ரலில்,75

புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி, கடந்த ஏப்ரல் மாதத்தில், மூன்று மடங்கு அதிகரித்து, 2.24 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நடைபெற்றுள்ளது. இதற்கு பொறியியல் பொருட்கள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், பெட்ரோலிய பொருட்கள் ஆகிய துறைகளில், அதிகளவு ஏற்றுமதி நடைபெற்றது காரணமாக அமைந்துள்ளது.



latest tamil news



இது குறித்து, வர்த்தக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த ஆண்டு ஏப்ரலில்,75 ஆயிரத்து, 258 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி ஆகியிருந்த நிலையில், நடப்பு ஆண்டு ஏப்ரலில், 2.24 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதையடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை கடந்த ஏப்ரலில், 51 ஆயிரத்து, 208 கோடி ரூபாயாக உள்ளது.மதிப்பீட்டு மாதத்தில் இறக்குமதியும் அதிகரித்து உள்ளது.


latest tamil news



இறக்குமதியும் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அளவுக்கு அதிகரித்துள்ளது. ஏப்ரலில் இறக்குமதி, 3.36 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு ஏப்ரலில் இறக்குமதி, 1.26 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே நடைபெற்றிருந்தது. இவ்வாறு வர்த்தக அமைச்சகம் அறிவித்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
I LOVE MY INDIA - CHENNAI,இந்தியா
04-மே-202110:29:23 IST Report Abuse
I LOVE MY INDIA மயில்சாமி மன்சூரலிகான் சிதம்பரம் மன்மோகன்சிங்கு சொன்னதன் நம்புவோம்
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
04-மே-202107:38:30 IST Report Abuse
g.s,rajan இறக்குமதி ???
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
04-மே-202104:01:33 IST Report Abuse
blocked user பொருளாதாரப்பேதைகள் சொன்னால்த்தான் நாங்கள் ஒத்துக்கொள்வோம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X