பொது செய்தி

இந்தியா

கோதுமை கொள்முதல் உயர்வு 28 லட்சம் விவசாயிகள் பயன்

Added : மே 04, 2021
Share
Advertisement
புதுடில்லி:மத்திய அரசு நடப்பு ரபி பருவத்தில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக கோதுமை கொள்முதல் செய்துள்ளதால் 28 லட்சத்து 80ஆயிரம் விவசாயி கள் பயன் அடைந்துஉள்ளனர்.நாட்டின் கோதுமை கொள்முதலில் பஞ்சாப் ஹரியானா மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்கள் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன.இந்நிலையில் மத்திய உணவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:நடப்பு ரபி பருவத்தில் மே 2

புதுடில்லி:மத்திய அரசு நடப்பு ரபி பருவத்தில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக கோதுமை கொள்முதல் செய்துள்ளதால் 28 லட்சத்து 80ஆயிரம் விவசாயி கள் பயன் அடைந்துஉள்ளனர்.

நாட்டின் கோதுமை கொள்முதலில் பஞ்சாப் ஹரியானா மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்கள் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன.இந்நிலையில் மத்திய உணவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:நடப்பு ரபி பருவத்தில் மே 2 வரை பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம்,ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 292.52 லட்சம் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இது கடந்த பருவத்தில் கொள்முதல் செய்ததை விட 70 சதவீதம் அதிகம். இதனால் 28 லட்சத்து 80 ஆயிரம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.முதன் முறையாக இந்த முறை பஞ்சாப் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் கோதுமை கொள்முதல் செய்ததற்கான பணம் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன்படி பஞ்சாப் விவசாயிகள் 17 ஆயிரத்து 495 கோடி ரூபாய்; ஹரியானா விவசாயிகள் 9268 கோடி ரூபாய் பெற்றுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X