பொது செய்தி

தமிழ்நாடு

4.68 லட்சம் படுக்கைகள் மத்திய அரசு தகவல்

Added : மே 04, 2021
Share
Advertisement
புதுடில்லி:'கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக நாடு முழுவதும் 2084 மருத்துவமனைகளில் 4.68 லட்சம் படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளன' என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. நாடு முழுவதும் மருத்துவமனைகளில் செய்ய பட்டு

புதுடில்லி:'கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக நாடு முழுவதும் 2084 மருத்துவமனைகளில் 4.68 லட்சம் படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளன' என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. நாடு முழுவதும் மருத்துவமனைகளில் செய்ய பட்டு உள்ள படுக்கை வசதிகள் குறித்த தேசிய திட்டத்தை அறிவிக்கும்படி உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

அதன்படி தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் மத்திய அரசு கூறியுள்ளதாவது:கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க மூன்று வகையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.கொரோனா நோயாளிகள் பராமரிப்பு மையங்கள் சிறப்பு மருத்துவ மையங்கள் மற்றும் சிறப்பு மருத்துவமனைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.அதன்படி நாடு முழுவதும் 2084 மருத்துவமனைகளில் 4.68 லட்சம் படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X