பொது செய்தி

இந்தியா

கடற்படை உதவி பிரதமரிடம் விளக்கம்

Added : மே 04, 2021
Share
Advertisement
புதுடில்லி:கொரோனாவுக்கு எதிரான போரில், அனைத்து மாநில அரசுகளுக்கும், நம் கடற்படை சார்பில் செய்யப்பட்டு வரும் உதவிகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடியிடம், கடற்படை தளபதி கரம்பீர் சிங் விவரித்தார்.கடற்படை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:பல்வேறு நகரங்களிலும் உள்ள, கடற்படைக்கு சொந்தமான மருத்துவமனைகள், பொது மக்கள் பயன்பாட்டுக்கு

புதுடில்லி:கொரோனாவுக்கு எதிரான போரில், அனைத்து மாநில அரசுகளுக்கும், நம் கடற்படை சார்பில் செய்யப்பட்டு வரும் உதவிகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடியிடம், கடற்படை தளபதி கரம்பீர் சிங் விவரித்தார்.

கடற்படை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:பல்வேறு நகரங்களிலும் உள்ள, கடற்படைக்கு சொந்தமான மருத்துவமனைகள், பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளன.நம் படையைச் சேர்ந்த டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள், நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில், கொரோனா சிகிச்சை மற்றும் செலவிலியர் பணிகளை போர்கால அடிப்படையில் மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ளனர்.

லட்சத்தீவுகள் மற்றும் அந்தமான் தீவுகளில், ஆக்சிஜன் வசதி அதிகரிக்க உதவிகள் செய்யப்பட்டுள்ளன.மேலும், குறிப்பிட்ட சில வெளிநாடுகளில் நாடுகளில் இருந்து, ஆக்சிஜன், 'கன்டெய்னர்கள்' எடுத்து வரும் பணியில், கடற்படை ஈடுபட்டுள்ளது.இந்த தகவல்களை, கடற்படை தளபதி கரம்பீர் சிங், பிரதமர் மோடியிடம் விரிவாக விளக்கினார்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X