பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா அச்சமின்றி முகக்கவசம் அணியாமல் மக்கள் நடமாட்டம்

Added : மே 04, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகரில் கொரோனா பரவும் எனத்தெரிந்தும் சிறிதும் அச்சமின்றி பலர் முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றித் திரிகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கொரோனா தொற்றுநோய் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. தினமும் 200க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்த சமூக இடைவெளியே பின்பற்றாத, முகக்கவசம்அணியாத தனிநபர்,

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகரில் கொரோனா பரவும் எனத்தெரிந்தும் சிறிதும் அச்சமின்றி பலர் முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றித் திரிகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கொரோனா தொற்றுநோய் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. தினமும் 200க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்த சமூக இடைவெளியே பின்பற்றாத, முகக்கவசம்அணியாத தனிநபர், கடைக்காரர்களிடம் ரூ.200 முதல் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இருப்பினும் கொரோனா பரவல் அச்சமின்றி பஸ் ஸ்டாண்ட், சந்தைகள் உள்ளிட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக மக்கள் வருகின்றனர். இம்மாதிரியான நபர்களால் நோய்தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது.ஆகையால் நகராட்சி, சுகாதாரத்துறையினர் இணைந்து முகக்கவசம் அணியாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X