ராமநாதபுரத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு அதிகம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு அதிகம்

Added : மே 04, 2021
Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கொரோனா வார்டில் சமீப காலமாக உயிரிழப்பு அதிகரித்து வருவதால் நோயாளிகளை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா 2ம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிய நிலையில், ராமநாதபுரம்அரசு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கொரோனா வார்டில் சமீப காலமாக உயிரிழப்பு அதிகரித்து வருவதால் நோயாளிகளை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா 2ம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிய நிலையில், ராமநாதபுரம்அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கொரோனா வார்டில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.அதே நேரம் வேறு நோய்த்தொற்று, காய்ச்சல், சளி அறிகுறிகளுடன் வருவோரை கொரோனா பரிசோதனை செய்துவிட்டு கொரோனா வார்டில் அனுமதிப்பதாக புகார் எழுந்துஉள்ளது.நேற்று மட்டும் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 20 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த இறப்பு பெரும்பாலும் கொரோனா பலியாக கணக்கிடப்படவில்லை. ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு செல்லவே மக்கள் அச்சப்படும் நிலைதான் உள்ளது. மாவட்ட நிர்வாகம் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X