அரசியல் செய்தி

தமிழ்நாடு

பரமக்குடியில் தகர்ந்த அ.தி.மு.க., கோட்டை

Added : மே 04, 2021
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி(தனி) தொகுதியில் 1996ல் தி.மு.க., பெற்ற வெற்றியை அடுத்து, 2021ல் அ.தி.மு.க.,வின் கோட்டையை தகர்த்துஉள்ளது. தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தொகுதியில் 1996ல் தி.மு.க., சார்பில் திசைவீரன் வெற்றி பெற்றார். 1991, 2011ல் அ.தி.மு.க., சார்பில் டாக்டர் சுந்தரராஜ், 2001, 2006ல் ராம்பிரபு முறையே த.மா.கா., மற்றும் காங்., சார்பில் போட்டியிட்டு

பரமக்குடி : பரமக்குடி(தனி) தொகுதியில் 1996ல் தி.மு.க., பெற்ற வெற்றியை அடுத்து, 2021ல் அ.தி.மு.க.,வின் கோட்டையை தகர்த்துஉள்ளது. தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தொகுதியில் 1996ல் தி.மு.க., சார்பில் திசைவீரன் வெற்றி பெற்றார். 1991, 2011ல் அ.தி.மு.க., சார்பில் டாக்டர் சுந்தரராஜ், 2001, 2006ல் ராம்பிரபு முறையே த.மா.கா., மற்றும் காங்., சார்பில் போட்டியிட்டு வென்றனர்.மேலும் 2016 அ.தி.மு.க.,வின் டாக்டர் முத்தையா வெற்றிபெற்று, ஜெ., இறப்புக்குப்பின், தினகரன் அணிக்கு தாவியதால் சட்டசபையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து 2019 இடைத்தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் சதன்பிரபாகர் 14 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில்தி.மு.க., வேட்பாளர் சம்பத்தை தோற்கடித்தார்.

தற்போது மீண்டும் சதன்பிரபாகருக்கு அ.தி.மு.க., வில் வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், தி.மு.க., வில் போகலூர் மாவட்ட கவுன்சிலர் முருகேசன் களமிறக்கப்பட்டார். தொடர்ந்து 2 லட்சத்து 55 ஆயிரத்து 654 ஓட்டுக்கள் பதிவானது. இதில் முருகேசன் 84,864 ஓட்டுக்கள் பெற்ற நிலையில், சதன்பிரபாகர் 71,279 ஓட்டுக்கள்பெற்றார். இதன்படி 13,785 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது.மூன்றாவது இடத்தில்நாம் தமிழர் சசிகலா 16,430ம், ம.நீ.ம.,கருப்பு ராஜா 3488 மற்றும் தே.மு.தி.க., செல்வி 2009 ஓட்டுக்களும் பெற்றனர். தொடர்ந்து கடந்த மூன்று முறை வெற்றி பெற்று அ.தி.மு.க.,வின் கோட்டையாக இருந்த பரமக்குடி தற்போது தி.மு.க., வசம் சென்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X