அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆத்துாரில் பா.ம.க.,வின் படுதோல்விக்கு காரணம்

Added : மே 04, 2021
Share
Advertisement
சின்னாளபட்டி : ஆத்துார் தொகுதியில் பா.ம.க.,வின் தோல்வியால் அ.தி.மு.க., நிர்வாகிகள் பதவி பறிப்பு குறித்த கலக்கத்தில் உள்ளனர். ஆத்துார் தொகுதியின் பலமிக்க தி.மு.க., வேட்பாளர் ஐ.பெரியசாமியை எதிர்த்து அ.தி.மு.க., வின் ஆளுமை மிக்க பிரமுகர்கள் களமிறங்குவர் என தொண்டர்கள் நம்பினர். ஆனால் தொகுதி கூட்டணி கட்சியான பா.ம.க.,வுக்கு ஒதுக்கப்பட்டது, அ.தி.மு.க.,வில் சோர்வை ஏற்படுத்தியது.

சின்னாளபட்டி : ஆத்துார் தொகுதியில் பா.ம.க.,வின் தோல்வியால் அ.தி.மு.க., நிர்வாகிகள் பதவி பறிப்பு குறித்த கலக்கத்தில் உள்ளனர்.

ஆத்துார் தொகுதியின் பலமிக்க தி.மு.க., வேட்பாளர் ஐ.பெரியசாமியை எதிர்த்து அ.தி.மு.க., வின் ஆளுமை மிக்க பிரமுகர்கள் களமிறங்குவர் என தொண்டர்கள் நம்பினர். ஆனால் தொகுதி கூட்டணி கட்சியான பா.ம.க.,வுக்கு ஒதுக்கப்பட்டது, அ.தி.மு.க.,வில் சோர்வை ஏற்படுத்தியது. அதேசமயம் படித்த பெண் வேட்பாளர், தொகுதியில் சில கிராமங்களில் பெரியசாமிக்கு எதிர்ப்பு போன்றவற்றால் தி.மு.க.,வை வீழ்த்தலாம் என கூட்டணியினர் நம்பினர். அதற்கு மாறாக பா.ம.க., வெற்றி வாய்ப்பை இழந்ததுடன், மாநில அளவில் அதிக ஓட்டு வித்தியாசத்தையும் தி.மு.க.,வுக்கு வாரி வழங்கி விட்டது.

'தி.மு.க.,வின் வியூகம், அதற்காக இரவு பகலாக ஒத்துழைத்த நிர்வாகிகள், அ.தி.மு.க.,வில் புதிய நிர்வாகிகள் மீதான அதிருப்தி, பெரும்பாலான கிராமங்களில் கிளைகள்கூட இல்லாத பா.ம.க.,வுக்கு தொகுதி ஒதுக்கீடு, பெயரளவில் பிரச்னைகளை எதிர்கொண்டு இலவச விளம்பரத்தை வேட்பாளர் நம்பியது, பிரசாரம், ஓட்டுப்பதிவு நாட்களில் செலவினத்தில் குளறுபடி' என, தோல்விக்கான காரணங்களை இப்போது பட்டியலிடுகின்றனர். இங்கு அ.தி.மு.க.,வின் தொடர் தோல்வியால், முக்கிய நிர்வாகிகள் களையெடுப்பு கலக்கத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X