அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆத்துாரில் 9 முறை தி.மு.க., வெற்றி

Added : மே 04, 2021
Share
Advertisement
கன்னிவாடி : ஆத்துார் தொகுதியை இதுவரை தி.மு.க., 9 முறையாக கைப்பற்றியுள்ளது. இத்தொகுதியில் 1957 முதல் இதுவரை 15 தேர்தல்கள் நடந்துள்ளன. முதல் தேர்தலில் மட்டுமே காங்கிரஸ் இங்கு வென்றது.பின்னர் 1962, 1967, 1971 தேர்தல்களில் தி.மு.க., வெற்றி பெற்றிருந்தது. 1977, 1980, 1984 தேர்தல்களில் அ.தி.மு.க.,விற்கு இங்கு தொடர் வெற்றி கிடைத்தது. 1989 முதல் தற்போது வரை 8 தேர்தல்களை தி.மு.க., மாநில துணைப் பொதுச் செயலாளர்

கன்னிவாடி : ஆத்துார் தொகுதியை இதுவரை தி.மு.க., 9 முறையாக கைப்பற்றியுள்ளது.

இத்தொகுதியில் 1957 முதல் இதுவரை 15 தேர்தல்கள் நடந்துள்ளன. முதல் தேர்தலில் மட்டுமே காங்கிரஸ் இங்கு வென்றது.பின்னர் 1962, 1967, 1971 தேர்தல்களில் தி.மு.க., வெற்றி பெற்றிருந்தது. 1977, 1980, 1984 தேர்தல்களில் அ.தி.மு.க.,விற்கு இங்கு தொடர் வெற்றி கிடைத்தது. 1989 முதல் தற்போது வரை 8 தேர்தல்களை தி.மு.க., மாநில துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி எதிர்கொண்டுள்ளார். இதில் 1991, 2001 தேர்தல்களில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது.இருப்பினும் அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன்(2006), விசுவநாதன் (2016) ஆகியோரை ஐ.பெரியசாமி வென்றுள்ளார். பின்னர் 2006, 2011, 2016, 2021 என 4 தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X