அரசியல் செய்தி

தமிழ்நாடு

நிலக்கோட்டையை தக்க வைத்த அ.தி.மு.க.,

Added : மே 04, 2021
Share
Advertisement
நிலக்கோட்டை : 2016 தேர்தலில் வென்ற நிலக்கோட்டை தொகுதியை அ.தி.மு.க., இம்முறையும் தக்கவைத்துக் கொண்டது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட தேன்மொழி 91 ஆயிரத்து 461 ஓட்டுகள் பெற்று 27 ஆயிரத்து 618 ஓட்டுகள் வித்தியாசத்தில், தி.மு.க., கூட்டணி கட்சியான மக்கள் விடுதலை கட்சி நிறுவனர் முருகவேல்ராஜனை (63,843) தோற்கடித்தார். இத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி

நிலக்கோட்டை : 2016 தேர்தலில் வென்ற நிலக்கோட்டை தொகுதியை அ.தி.மு.க., இம்முறையும் தக்கவைத்துக் கொண்டது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட தேன்மொழி 91 ஆயிரத்து 461 ஓட்டுகள் பெற்று 27 ஆயிரத்து 618 ஓட்டுகள் வித்தியாசத்தில், தி.மு.க., கூட்டணி கட்சியான மக்கள் விடுதலை கட்சி நிறுவனர் முருகவேல்ராஜனை (63,843) தோற்கடித்தார். இத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வசந்தாதேவி 17 ஆயிரத்து 505 ஓட்டுகளை பெற்று 3ம் இடத்தில் உள்ளார். இத் தொகுதியில் தேன்மொழிக்கு இது மூன்றாவது வெற்றி. இவர் ஏற்கனவே 2006 தேர்தலில் 5600 மற்றும் 2019 இடைத்தேர்தலில் 20,675 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். இவ்வெற்றியால் நிலக்கோட்டை அ.தி.மு.க.,வின் கோட்டையென நிரூபிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X