பொது செய்தி

தமிழ்நாடு

அதிகம்!

Added : மே 04, 2021
Share
Advertisement
தேர்தலில் வேட்பாளர்களுக்கு ஓட்டுப்போட விரும்பாதவர்கள் 'ஓட்டளிக்க விருப்பமில்லை' என்பதை தெரிவிக்க, ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் கடைசி பட்டன் 'நோட்டா' பட்டனாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.கடந்த மாதம் நடந்த தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமானோர் 'நோட்டா' பட்டனை அழுத்தி உள்ளனர். நத்தம் தொகுதியில் 1,444 ஓட்டுகள், ஒட்டன்சத்திரத்தில் 1,457, பழநியில் 1,088,

தேர்தலில் வேட்பாளர்களுக்கு ஓட்டுப்போட விரும்பாதவர்கள் 'ஓட்டளிக்க விருப்பமில்லை' என்பதை தெரிவிக்க, ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் கடைசி பட்டன் 'நோட்டா' பட்டனாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.கடந்த மாதம் நடந்த தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமானோர் 'நோட்டா' பட்டனை அழுத்தி உள்ளனர்.

நத்தம் தொகுதியில் 1,444 ஓட்டுகள், ஒட்டன்சத்திரத்தில் 1,457, பழநியில் 1,088, வேடசந்துாரில் 803, நிலக்கோட்டையில் 1,260, ஆத்துாரில் 1,564 என மொத்தம் 9,423 ஓட்டுகள் பதிவாகியிருந்தன. இதில் திண்டுக்கல்லில் (1,807) தான் அதிகம் பதிவாகி இருந்தது. (2019 லோக்சபா தேர்தலில் 10 ஆயிரத்து 591 ஓட்டுகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.) ஏழு தொகுதிகளிலும் மொத்தம் 132 பேர் போட்டியிட்டனர். ஓட்டு எண்ணிக்கையில் 'நோட்டா'விற்கு பதிவான ஓட்டுகளை விட குறைவான ஓட்டுகளை 95 பேர் பெற்றுள்ளனர்.நத்தத்தில் 11 பேர், திண்டுக்கல் 16 பேர், ஒட்டன்சத்திரம் 9 பேர், பழநி 19 பேர், வேடசந்துார் 14 பேர், நிலக்கோட்டை 13 பேர், ஆத்துார் 13 பேர் என மொத்தம் 95 பேர் 'நோட்டா'வுக்கும் குறைந்த ஓட்டுகளை பெற்றனர். அதில் 100 - 500 ஓட்டுகளுக்குள் 80 பேரும், 500 - 1000 க்குள் 13 பேரும், 1000 - 1,500 க்குள் மற்றும் 1,500 - 2 ஆயிரத்திற்குள் தலா ஒருவரும் பெற்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X