கால்நடைக்கு பயன்படும் தட்டைப்பூண்டு வளர்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடைக்கு பயன்படும் தட்டைப்பூண்டு வளர்ப்பு

Added : மே 04, 2021
Share
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே தட்டைப்பூண்டு செடி வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். முதுகுளத்துார் தாலுகா கீழக்கன்னிச்சேரி, வெண்ணீர்வாய்க்கால், விளங்குளத்துார் உட்பட பல்வேறு கிராமங்களில் நெல் அறுவடைக்கு பின்பு நிலத்தை தரிசாக விடக்கூடாது என்பதற்காக ஒருசில விவசாயிகள் நிலத்தை உழவுசெய்து தட்டைப்பூண்டு செடி வளர்ப்பில் ஆர்வம் காட்டினர்.செடி

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே தட்டைப்பூண்டு செடி வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

முதுகுளத்துார் தாலுகா கீழக்கன்னிச்சேரி, வெண்ணீர்வாய்க்கால், விளங்குளத்துார் உட்பட பல்வேறு கிராமங்களில் நெல் அறுவடைக்கு பின்பு நிலத்தை தரிசாக விடக்கூடாது என்பதற்காக ஒருசில விவசாயிகள் நிலத்தை உழவுசெய்து தட்டைப்பூண்டு செடி வளர்ப்பில் ஆர்வம் காட்டினர்.செடி வளர்ப்பிற்கு குறைவான அளவு தண்ணீர் போதுமானதால் நன்கு வளர்ந்துள்ளது. இச்செடியினால் நிலத்தில் களைகள் அதிகம் உருவாகாமலும், மண்ணின் தன்மை மாறி காற்றோட்டம் ஏற்படும்.தட்டைப்பூண்டு செடியை கால்நடைகளுக்கு தீவனமாகவும், நிலங்களுக்கு இயற்கை உரமாகவும் பயன்படுத்தலாம். இதனால் தீவனத்திற்கு தேவையான செலவு குறைகிறது. எனவே உரம், தீவனத்திற்கு பயன்படும் தட்டைப்பூண்டு செடிகளை விவசாயிகள் ஆர்வமாக வளர்க்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X