மஹாராஷ்டிராவில்

Added : மே 04, 2021
Share
Advertisement
சதாரா, மே 4-மஹாராஷ்டிராவில் தொழிலதிபர் அனில் அம்பானியால் ஒரு தனியார் 'கோல்ப்' விளையாட்டு கிளப்பிற்கு மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மஹாராஷ்டிராவில் கொரோனா வைரசால்ஏற்படும் தினசரி பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கிடையே வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில் பிரபல தொழிலதிபர் அனில்

சதாரா, மே 4-

மஹாராஷ்டிராவில் தொழிலதிபர் அனில் அம்பானியால் ஒரு தனியார் 'கோல்ப்' விளையாட்டு கிளப்பிற்கு மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மஹாராஷ்டிராவில் கொரோனா வைரசால்ஏற்படும் தினசரி பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கிடையே வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியால் ஒரு தனியார் கோல்ப் விளையாட்டு கிளப்பிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மஹாராஷ்டிராவின் மஹாபலேஷ்வர் மாவட்டத்திலுள்ள ஒரு தனியார்கோல்ப் கிளப்பிற்கு அனில் அம்பானி தன் மனைவி டினா அம்பானி மற்றும் மகன்களுடன் சென்றுஉள்ளார்.

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி திறந்துவைக்கப்பட்டிருந்த அந்த கோல்ப் கிளப்பிற்குள் அம்பானி தன் குடும்பத்தினருடன் நடந்து செல்லும் 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.இது மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு செல்லவே அந்த தனியார் கிளப்பிற்கு 'நோட்டீஸ்' அனுப்பிவைக்கப்பட்டது. உடனடியாக கிளப்பில் உள்ள கோல்ப் மைதானத்தை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.'விதிமீறி கிளப்பிற்குள் மக்களை அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X