சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சி நிர்வாகத்தில் ஆறுதல் தரும் 'கொரோனா'

Added : மே 04, 2021
Share
Advertisement
வடமதுரை : ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் உள்ளாட்சி அமைப்பினர் தற்போது நிலவும் கொரோனா கால சூழ்நிலையால் சிறிது ஆறுதலாக உள்ளனர். 2016ல் அ.தி.மு.க., தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை கைப்பற்றியபோது அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருந்தது. தி.மு.க., சார்பில் சில குறைகளை சுட்டிக்காட்டி வழக்கு தொடர்ந்ததால் தேர்தல் தள்ளிபோனது.பின்னர் ஒருவழியாக 2019 இறுதியில் ஊரக பகுதிகளில்

வடமதுரை : ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் உள்ளாட்சி அமைப்பினர் தற்போது நிலவும் கொரோனா கால சூழ்நிலையால் சிறிது ஆறுதலாக உள்ளனர்.

2016ல் அ.தி.மு.க., தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை கைப்பற்றியபோது அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருந்தது. தி.மு.க., சார்பில் சில குறைகளை சுட்டிக்காட்டி வழக்கு தொடர்ந்ததால் தேர்தல் தள்ளிபோனது.பின்னர் ஒருவழியாக 2019 இறுதியில் ஊரக பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடந்து 2020 ஜனவரியில் நிர்வாகிகள் பொறுப்பேற்று செயல்பட்டு வருகின்றனர். புதிய மாவட்டங்கள் பிரிப்பால் ஏற்பட்ட வார்டு வரையறை பிரச்னையால் 10 மாவட்டங்களில் ஊரக பகுதி தேர்தலும் நடக்காமல் விடுப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சுத்தமாகவே தேர்தல் நடக்காமல் நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக தனி அலுவலர் நிர்வாகத்தில் உள்ளது.

தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப்பட்டு அனைத்து பகுதிக்கும் தேர்தல் நடத்தும் வாய்ப்புள்ளதாக பெரும்பாலான நிர்வாகிகளிடம் அச்சம் உள்ளது. இருந்தாலும் கொரோனா சூழலால் புதிய தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என்பதால் கலைப்பு வாய்ப்பும் இருக்காது என நம்பிக்கையுடன் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X