சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்லில் 119 பேர் 'டிபாசிட்' இழப்பு

Added : மே 04, 2021
Share
Advertisement
திண்டுக்கல், : திண்டுக்கல்லில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட 132 வேட்பாளர்களில் 119 பேர் 'டிபாசிட்' இழந்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் சுயேச்சைகள் உட்பட 132 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலில் போட்டியிடுவோர் பதிவான ஓட்டுகளில் ஆறில் ஒரு பங்கு ஓட்டுகளை பெறாவிடில், அவர்கள் டிபாசிட் ஆக செலுத்திய பணத்தை திரும்ப பெற இயலாது என, தேர்தல் ஆணைய விதி உள்ளது.119 பேர்

திண்டுக்கல், : திண்டுக்கல்லில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட 132 வேட்பாளர்களில் 119 பேர் 'டிபாசிட்' இழந்துள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் சுயேச்சைகள் உட்பட 132 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலில் போட்டியிடுவோர் பதிவான ஓட்டுகளில் ஆறில் ஒரு பங்கு ஓட்டுகளை பெறாவிடில், அவர்கள் டிபாசிட் ஆக செலுத்திய பணத்தை திரும்ப பெற இயலாது என, தேர்தல் ஆணைய விதி உள்ளது.119 பேர் டிபாசிட் இழப்புஇத்தேர்தலில் நத்தம் தொகுதியில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 575 ஓட்டுகள் பதிவாகின. இதில் 6 ல் ஒரு பங்கான 37 ஆயிரத்து 595 ஓட்டுகளை 13 பேர் பெறவில்லை. திண்டுக்கல்லில் 32 ஆயிரத்து 579 ஓட்டுகள் பெற இயலாத 19 பேர், ஒட்டன்சத்திரத்தில் 33 ஆயிரத்து 639 பெற இயலாத 12 பேர், வேடசந்துாரில் 35 ஆயிரத்து 513 பெற இயலாத 18 பேர்.பழநியில் 33 ஆயிரத்து 848 ஓட்டுகள் பெற இயலாத 22 பேர், ஆத்துாரில் 38 ஆயிரத்து 377 பெற இயலாத 19 பேர், நிலக்கோட்டையில் 30 ஆயிரத்து 800 ஓட்டுகள் பெற இயலாத 16 பேர் உட்பட மொத்தம் 132 பேரில் 119 பேர் டிபாசிட்டை இழந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X