பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் மழை

Added : மே 04, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் இரண்டு நாட்களாக காலை நேரத்தில் திடீர் மழை பெய்து வருகிறது. அக்னி நட்சத்திரம் இன்று (மே 4) துவங்கி 29ல் முடிவடைகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாககோடை வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில் இரண்டு நாட்களாக காலை நேரத்தில் மழை பெய்கிறது. அவ்வப்போது மேகமூட்டத்துடன் இதமான சூழல் நிலவுகிறது.நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணிக்கு

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் இரண்டு நாட்களாக காலை நேரத்தில் திடீர் மழை பெய்து வருகிறது.

அக்னி நட்சத்திரம் இன்று (மே 4) துவங்கி 29ல் முடிவடைகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாககோடை வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில் இரண்டு நாட்களாக காலை நேரத்தில் மழை பெய்கிறது. அவ்வப்போது மேகமூட்டத்துடன் இதமான சூழல் நிலவுகிறது.நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணிக்கு ராமநாதபுரம் நகர் பகுதி, பாரதிநகர் பட்டணம்காத்தான் பகுதியில் கலெக்டர் அலுவலகம் வரை மட்டுமே அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. அதற்கு அடுத்து மழை இல்லை. இதே போல் நேற்று காலை 11:00 மணி முதல் அரை மணி நேரம் நகர் பகுதியில் பலத்த மழை பெய்தது.

இதனால் கோடை வெப்பம் சற்று தணிந்தது. இந்த சிறு மழைக்கே ராமநாதபுரம் பஜார் போலீஸ் ஸ்டேஷன் முன்பு மழை நீர் தேங்கியதால் போலீசார், புகார் அளிக்க வந்த பொது மக்கள் அவதிப்பட்டனர். இதே போல் ராமநாதபுரம் சாலைத் தெரு, அரண்மனை பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்தது.* திருவாடானை பகுதியில் நேற்று காலை 6:00 முதல் 9:00 மணி வரை பலத்த மழை பெய்தது.மழையால் வெப்பம் குறைந்தது. விவசாயிகள் கூறியதாவது: நேற்று பெய்த மழை கோடை உழவிற்கு ஏற்றதாக இருந்தது. வயலில் ஈரப்பதமாக இருப்பதால் இன்னும் சில நாட்களில் உழவு பணியில் ஈடுபடுவோம் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X