சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஜீப் டிரைவர் 'சஸ்பெண்ட்'

Added : மே 04, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில் போலீஸ் ஜீப் கடத்தப்பட்ட விவகாரத்தில் ஜீப் டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கடந்த மாதம் 27ம் தேதி திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் முன் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் ஜீப்பை திருவண்ணாமலை செங்கத்தை சேர்ந்த விஜய் 23 என்பவர் போதையில் கடத்தி சென்றார். ஊத்துக்குளி ரோடு வெள்ளியம்பாளையம் தாமரை கோவில் அருகே லாரி மீது மோதியதில் ஜீப்

திருப்பூர்:திருப்பூரில் போலீஸ் ஜீப் கடத்தப்பட்ட விவகாரத்தில் ஜீப் டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கடந்த மாதம் 27ம் தேதி திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் முன் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் ஜீப்பை திருவண்ணாமலை செங்கத்தை சேர்ந்த விஜய் 23 என்பவர் போதையில் கடத்தி சென்றார். ஊத்துக்குளி ரோடு வெள்ளியம்பாளையம் தாமரை கோவில் அருகே லாரி மீது மோதியதில் ஜீப் விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த விஜய் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.இந்நிலையில் போலீஸ் ஜீப் டிரைவரான ஆயுதப்படை போலீஸ்காரர் ராஜகுருவை 34 பணியில் அலட்சியமாக இருந்த காரணத்துக்காக திருப்பூர் போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X