மக்கள் நல பணியாளர்கள் மீண்டும் வேலை எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் நல பணியாளர்கள் மீண்டும் வேலை எதிர்பார்ப்பு

Added : மே 04, 2021
Share
வேடசந்துார் : வேலை வாய்ப்பை இழந்த மக்கள் நல பணியாளர்கள் மீண்டும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர். கடந்த 1989 ல், தி.மு.க., ஆட்சியில் ஊராட்சிகளில் 13,500 மக்கள் நல பணியாளர்கள் பணியிடம் உருவாக்கப்பட்டு, மாத சம்பளமாக ரூ.200 வழங்கப்பட்டது. குடிநீர், தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை கவனித்தனர். பிறகு ஆட்சி மாற்றத்தின் போது இப்பணியிடம் ரத்து

வேடசந்துார் : வேலை வாய்ப்பை இழந்த மக்கள் நல பணியாளர்கள் மீண்டும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.

கடந்த 1989 ல், தி.மு.க., ஆட்சியில் ஊராட்சிகளில் 13,500 மக்கள் நல பணியாளர்கள் பணியிடம் உருவாக்கப்பட்டு, மாத சம்பளமாக ரூ.200 வழங்கப்பட்டது. குடிநீர், தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை கவனித்தனர். பிறகு ஆட்சி மாற்றத்தின் போது இப்பணியிடம் ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் பணி வாய்ப்பு இழந்தனர்.பிறகு 2006 ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அவர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது. அப்போது நுாறு நாள் வேலை திட்ட பணிகளை முழுவதுமாக கவனித்தனர். மாத சம்பளமாக ரூ.5,200 பெற்றனர்.2011 ல் அ.தி.மு.க., ஆட்சியின் போது மீண்டும் இப்பணியிடம் ரத்து செய்யப்பட்டதால், பத்தாண்டுகளாக பணியின்றி உள்ளனர்.

வயதானதால் பலர் வேறு வேலைக்கும் செல்ல முடியாமல் உள்ளனர். சிலர் இறந்துள்ளனர். சிலர் வேலை கேட்டு கோர்ட்டுக்குச் சென்றுள்ளனர். தற்போது தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளதால் மீண்டும் பணிவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X