அரசியல் செய்தி

தமிழ்நாடு

மானாமதுரையில் தொடர் தோல்வியிலிருந்து மீண்ட தி.மு.க.,

Added : மே 04, 2021
Share
Advertisement
மானாமதுரை : சிவகங்கை மாவட்டத்தில் அ.தி.மு.க.,வினரின் மானங்காத்த மானாமதுரை என்றழைக்கப்படும் மானாமதுரை தொகுதியை இந்த முறை தி.மு.க.,கைப்பற்றியுள்ளது. மானாமதுரை தொகுதியில் அ.தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ., நாகராஜன் தி.மு.க.,சார்பில் முன்னாள் அமைச்சர் தமிழரசி, அ.ம.மு.க,சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ,மாரியப்பன் கென்னடி நாம் தமிழர் கட்சி சார்பில் சண்முகப்பிரியா, மக்கள் நீதி மய்யம்

மானாமதுரை : சிவகங்கை மாவட்டத்தில் அ.தி.மு.க.,வினரின் மானங்காத்த மானாமதுரை என்றழைக்கப்படும் மானாமதுரை தொகுதியை இந்த முறை தி.மு.க.,கைப்பற்றியுள்ளது.

மானாமதுரை தொகுதியில் அ.தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ., நாகராஜன் தி.மு.க.,சார்பில் முன்னாள் அமைச்சர் தமிழரசி, அ.ம.மு.க,சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ,மாரியப்பன் கென்னடி நாம் தமிழர் கட்சி சார்பில் சண்முகப்பிரியா, மக்கள் நீதி மய்யம் சார்பில் சிவசங்கரி போட்டியிட்டனர்.மானாமதுரை தொகுதியில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 826 ஆண் வாக்காளர் களும்,ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 936 பெண் வாக்காளர்களும்,மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 2 லட்சத்து 77 ஆயிரத்து 763 வாக்காளர்கள் உள்ளனர்.மொத்தம் 71.87 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

ஓட்டு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே அ.தி.மு.க.,வேட்பாளர் நாகராஜனை விட தி.மு.க.,வேட்பாளர் தமிழரசி கூடுதல் வாக்குகள் பெற்று வந்தார். 10 மற்றும் 11, 12 வது சுற்றில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த நாகராஜன் எம்.எல்.ஏ அதிக ஓட்டுகள் பெற்றதையடுத்து இரு கட்சியினரிடையே பதட்டம் ஏற்பட்டது.தொடர்ந்து 13வது சுற்று தொடங்கியபோது மீண்டும் தி.மு.க., வேட்பாளர் தமிழரசி முன்னிலை பெற்றார். அதை தொடர்ந்து நடைபெற்ற சுற்றுகளிலும் தி.மு.க., வேட்பாளர் தமிழரசி தொடர்ந்து கூடுதல் ஓட்டுகளை பெற்று வந்த நிலையில் கடைசி சுற்றான 29-வது சுற்றின் முடிவின் போது தி.மு.க., வேட்பாளர் தமிழரசி14,091 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

சிவகங்கை மாவட்டத்தில் அ.தி.மு.க.,வினரின் மானங்காத்த மானாமதுரை என்றழைக்கப் படும் மானாமதுரை தொகுதியில் கடந்த 4 சட்டசபை தேர்தல்களிலும் அ.தி.மு.க., வெற்றி பெற்று வந்துள்ளது.அ.தி.மு.க.,வுக்கு சோதனையான காலங்களிலும் இங்கு அ.தி.மு.க.,வே வெற்றி பெற்றுள்ளது .இந்நிலையில் இந்த முறை இதனை முறியடித்து தி.மு.க.,4 தொடர் தோல்விகளுக்கு பிறகு வெற்றி பெற்றுள்ளது.கடந்த தேர்தல்களில் மானாமதுரை தொகுதி ஓட்டு எண்ணிக்கை ஆரம்பிக்கும்போது முதலில் திருப்புவனம் ஒன்றியம் ஓட்டுகள் எண்ணப்படும் போது வழக்கம்போல் அ.தி.மு.க.,வினர் 10 ஆயிரம் ஓட்டுகள் முன்னணியில் இருப்பர்.ஆனால் இந்த முறை திருப்புவனம் ஒன்றியத்தில் அ.தி.மு.க.,வை விட தி.மு.க.,கூடுதல் ஓட்டுகள் பெற்றதால் அ.திமு.க.,தோல்வியடைந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X