பொது செய்தி

தமிழ்நாடு

கோடை மழையால் நிரம்பிய தடுப்பணைகள்

Added : மே 04, 2021
Share
Advertisement
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் பெய்து வரும் கோடை மழையால் தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. மாவட்டத்தில் 2020ல் கோடை மழை கைகொடுக்காத நிலையில் ஜூனில் துவங்கிய தென்மேற்கு பருவமழையும் போதுமானதாக பெய்யவில்லை.ஆகஸ்டில் துவங்கிய வடகிழக்கு பருவமழை கைகொடுக்க, இம்மழை 2021 ஜனவரி, பிப்ரவரி வரை பெய்தது. பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் துவங்கிய கோடை வெயில் மார்ச், ஏப்ரல் வரை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் பெய்து வரும் கோடை மழையால் தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன.
மாவட்டத்தில் 2020ல் கோடை மழை கைகொடுக்காத நிலையில் ஜூனில் துவங்கிய தென்மேற்கு பருவமழையும் போதுமானதாக பெய்யவில்லை.ஆகஸ்டில் துவங்கிய வடகிழக்கு பருவமழை கைகொடுக்க, இம்மழை 2021 ஜனவரி, பிப்ரவரி வரை பெய்தது. பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் துவங்கிய கோடை வெயில் மார்ச், ஏப்ரல் வரை நீடிக்க கோடை மழையும் அவ்வப்போது தலை காட்டியதால் வெயிலின் தாக்கமும் ஓரளவு கட்டுக்குள் இருந்தது.தற்போதைய கோடை மழையால் கிராமங்களில் கண்மாய்க்கு செல்லும் தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. கொரோனா தொற்றால் வீட்டில் முடங்கிய சிறுவர்களும் நீச்சல் அடித்து குளித்து மகிழ்கின்றனர். நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து உப்புச்சுவையும் குறைவதாக கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X