பொது செய்தி

தமிழ்நாடு

சத்துணவு ஊழியர்கள் பணப்பலன் அனுமதிக்க மறுக்கும் கருவூலகம்

Added : மே 04, 2021
Share
Advertisement
சிவகங்கை : சத்துணவு ஊழியர்களின் பணப்பலன்களை அனுமதிக்க கருவூலகம் மறுத்துவருவதால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தவித்து வருகின்றனர். சிவகங்கை, காளையார்கோவில் ஒன்றியங்களில் சத்துணவு திட்டத்தில்ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை திட்டத்தின் கீழ் சம்பளம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.புதிய சம்பள

சிவகங்கை : சத்துணவு ஊழியர்களின் பணப்பலன்களை அனுமதிக்க கருவூலகம் மறுத்துவருவதால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தவித்து வருகின்றனர்.

சிவகங்கை, காளையார்கோவில் ஒன்றியங்களில் சத்துணவு திட்டத்தில்ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை திட்டத்தின் கீழ் சம்பளம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.புதிய சம்பள பட்டியல், பணப் பலன்களை கருவூலகம் அனுமதிக்கமறுத்து வருகிறது. ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை திட்டத்தில் அவ்வப்போதுசெயல்படுத்தப்படும் மாற்றங்கள் குறித்து உரிய அதிகாரிகளுக்கு தெரிவிப்பதில்லை.இதன் காரணமாக ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்கள், பணிஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியம் போன்ற பலன்கள் வழங்க கருவூலகஅதிகாரிகள் மறுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கருவூலக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சத்துணவு ஊழியர்களின் பணப்பலன்களை வழங்க முன் வரவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X