பொது செய்தி

தமிழ்நாடு

கூடுதல் தடுப்பூசி எதிர்பார்ப்பு

Added : மே 04, 2021
Share
Advertisement
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் கொரோனா பரவுவதை தொடர்ந்து தடுப்பூசியின் தேவை அதிகரித்துள்ளது.இவ்வொன்றியத்தில் சில வாரங்களாக கொரோனா தொற்று பரவலாக உறுதியாகி வருகிறது. கொரோனா பாதித்தவர்கள் உடனடியாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்படுகின்றனர்.கொரோனா தடுப்பூசி போடும் பணியும் நடந்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் 2 ஆயிரம்

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் கொரோனா பரவுவதை தொடர்ந்து தடுப்பூசியின் தேவை அதிகரித்துள்ளது.இவ்வொன்றியத்தில் சில வாரங்களாக கொரோனா தொற்று பரவலாக உறுதியாகி வருகிறது.

கொரோனா பாதித்தவர்கள் உடனடியாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்படுகின்றனர்.கொரோனா தடுப்பூசி போடும் பணியும் நடந்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் 2 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் தற்போது தடுப்பூசியின் வரத்து குறைவாக உள்ளது. இதனால் சுகாதாரத்துறையினர் கூடுதல் தடுப்பூசி முகாம்களை நடத்த முடியாமல் உள்ளனர். கையிருப்பில் உள்ள குறைந்த அளவிலான தடுப்பூசிகளை வைத்தே சமாளித்து வருகின்றனர். தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மக்களிடம் குறைந்துள்ளதால் ஒரு நாளைக்கு சராசரியாக 20 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.

எனவே கூடுதல் முகாம்களை நடத்த ஏதுவாக அதிக அளவில் தடுப்பூசிகளை அனுப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி குறித்த விழிப்புணர்வையும் பொது மக்களுக்கு தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X