அரசியல் செய்தி

தமிழ்நாடு

கம்யூ.,விடமிருந்த மீண்ட சிவகங்கை

Added : மே 04, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கையை இரு முறை கைப்பற்றி, கோட்டையாக வைத்திருந்த இந்திய கம்யூ., 2006க்கு பின் நடந்த தேர்தல்களில் தோல்வியை தழுவியதன் மூலம், கம்யூ., கையில் சிக்கியிருந்த சிவகங்கை தொகுதி மீண்டது. சிவகங்கை தொகுதியை 2006 ல் தி.மு.க., கூட்டணியிலும், 2011 தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் இந்திய கம்யூ., கட்சிக்கு ஒதுக்கினர். இரு முறையும் போட்டியிட்டு குணசேகரன் எம்.எல்.ஏ., ஆனார். 2016 ல் மக்கள்

சிவகங்கை : சிவகங்கையை இரு முறை கைப்பற்றி, கோட்டையாக வைத்திருந்த இந்திய கம்யூ., 2006க்கு பின் நடந்த தேர்தல்களில் தோல்வியை தழுவியதன் மூலம், கம்யூ., கையில் சிக்கியிருந்த சிவகங்கை தொகுதி மீண்டது.

சிவகங்கை தொகுதியை 2006 ல் தி.மு.க., கூட்டணியிலும், 2011 தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் இந்திய கம்யூ., கட்சிக்கு ஒதுக்கினர். இரு முறையும் போட்டியிட்டு குணசேகரன் எம்.எல்.ஏ., ஆனார். 2016 ல் மக்கள் நலக்கூட்டணியில் போட்டியிட்ட இவர் தோல்வி அடைந்தார்.2021 தேர்தலில் தி.மு.க.,விற்கு சிவகங்கையை ஒதுக்கினால், நிச்சயம் வெற்றி பெறலாம் என அக்கட்சியினர் தலைமைக்கு தொடர்ந்து அழுத்தம் தந்தனர். ஆனால், இத்தேர்தலிலும் தி.மு.க., தலைமை கட்சியினருக்கு வாய்ப்பு வழங்காமல், மீண்டும் இந்திய கம்யூ., கட்சிக்கே சிவகங்கையை ஒதுக்கியது.

4 வது முறையாக போட்டியிட்ட முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரனை, அ.தி.மு.க., வேட்பாளர் செந்தில்நாதன் 11240 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம் தொடர்ந்து இந்திய கம்யூ., தொகுதியாக இருந்த சிவகங்கையை, கடந்த இரு சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க., கைப்பற்றியது.இதன் மூலம் இரண்டு முறை இந்திய கம்யூ., கட்சியிடம் சிக்கியிருந்த சிவகங்கையை மீட்டுள்ளதாக அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர். அதே போன்று தி.மு.க.,வினர், தங்களுக்கு இத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்திருந்தால், நிச்சயம் தி.மு.க.,வின் வெற்றி தொகுதியாக காண்பித்திருப்போம் என புலம்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X