பொது செய்தி

தமிழ்நாடு

ஏற்றம் காணும் தேயிலை ஏலத்தால் மகிழ்ச்சி; ஒரே வாரத்தில் ரூ.7.52 கோடி அதிகரிப்பு

Added : மே 04, 2021
Share
Advertisement
குன்னுார் : குன்னுார் தேயிலை ஏலத்தில், 23.30 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது; ஒரே வாரத்தில், 7.52 கோடி ரூபாய் அதிகரித்ததால் உற்பத்தியாளர்கள்; விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.குன்னுார் தனியார் தேயிலை ஏல மையத்தில் நடப்பாண்டுக்கான, 17வது ஏலம் நடந்தது. அதில், 'இலை ரகம், 15 லட்சத்து 77 ஆயிரத்து 975 கிலோ; டஸ்ட் ரகம், 7 லட்சத்து 14 ஆயிரத்து 743 கிலோ,' என, மொத்தம், 22 லட்சத்து 92 ஆயிரத்து 718

குன்னுார் : குன்னுார் தேயிலை ஏலத்தில், 23.30 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது; ஒரே வாரத்தில், 7.52 கோடி ரூபாய் அதிகரித்ததால் உற்பத்தியாளர்கள்; விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குன்னுார் தனியார் தேயிலை ஏல மையத்தில் நடப்பாண்டுக்கான, 17வது ஏலம் நடந்தது. அதில், 'இலை ரகம், 15 லட்சத்து 77 ஆயிரத்து 975 கிலோ; டஸ்ட் ரகம், 7 லட்சத்து 14 ஆயிரத்து 743 கிலோ,' என, மொத்தம், 22 லட்சத்து 92 ஆயிரத்து 718 கிலோ வந்தது.'இலை ரகம், 14 லட்சத்து 92 ஆயிரத்து 590 கிலோ; டஸ்ட் ரகம், 4 லட்சத்து 90 ஆயிரத்து 952 கிலோ,' என, மொத்தம், 19 லட்சத்து 83 ஆயிரத்து 542 கிலோ விற்றது.

சராசரி விலை, 117.48 ரூபாயாக இருந்தது; கிலோவுக்கு ரூ.3 வரை உயர்ந்தது. 23.30 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.வரத்தும், விற்பனையும், சராசரி விலையும் அதிகரித்ததால், ஒரே வாரத்தில் மொத்த வருமானம், 7.52 கோடி ரூபாய் அதிகரித்தது. இதனால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X