பசுந்தேயிலைக்கு ரூ.18.63 விலை நிர்ணயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பசுந்தேயிலைக்கு ரூ.18.63 விலை நிர்ணயம்

Added : மே 04, 2021
Share
குன்னுார் : தேயிலை வாரியம் சார்பில், இந்த மாதத்திற்கான பசுந்தேயிலைக்கு, ரூ.18.63 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.குன்னுாரில் உள்ள, இந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் பாலாஜி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:நீலகிரி மாவட்டத்தில், சிறு தேயிலை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் தேயிலை துாள், ஏல மையங்களில் ஏலம் விடப்படுகிறது. இதன் விலையை அடிப்படையாக வைத்து, பசுந்தேயிலைக்கு

குன்னுார் : தேயிலை வாரியம் சார்பில், இந்த மாதத்திற்கான பசுந்தேயிலைக்கு, ரூ.18.63 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குன்னுாரில் உள்ள, இந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் பாலாஜி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:நீலகிரி மாவட்டத்தில், சிறு தேயிலை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் தேயிலை துாள், ஏல மையங்களில் ஏலம் விடப்படுகிறது. இதன் விலையை அடிப்படையாக வைத்து, பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை, கடந்த, 2015ம் ஆண்டில் இருந்து நிர்ணயம் செய்யப்படுகிறது.

கடந்த ஏப்., மாத ஏல அடிப்படையில், இந்த மாதத்திற்கான பசுந்தேயிலைக்கு, கொள்முதல் விலையாக கிலோவுக்கு, 18.63 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை வழங்காத தொழிற்சாலைகளை, கண்காணித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, பாலாஜி கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X