அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து

Added : மே 04, 2021
Share
கோத்தகிரி : கோத்தகிரி அரசு மருத்துவமனை மின்கம்பத்தில், திடீர் தீ விபத்து ஏற்பட்டதால், நோயாளிகள் அலறி அடித்து ஓடினர்.கோத்தகிரி அரசு மருத்துவமனை அவசர பிரிவு பகுதியில் மின் கம்பம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு துவங்கிய மழை அதிகாலை வரை தொடர்ந்து பெய்தது. அப்போது, அதிகாலை, 6:00 மணியளவில், மின்கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.இதனால், அங்கிருந்த செவிலியர் மற்றும்

கோத்தகிரி : கோத்தகிரி அரசு மருத்துவமனை மின்கம்பத்தில், திடீர் தீ விபத்து ஏற்பட்டதால், நோயாளிகள் அலறி அடித்து ஓடினர்.

கோத்தகிரி அரசு மருத்துவமனை அவசர பிரிவு பகுதியில் மின் கம்பம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு துவங்கிய மழை அதிகாலை வரை தொடர்ந்து பெய்தது. அப்போது, அதிகாலை, 6:00 மணியளவில், மின்கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.இதனால், அங்கிருந்த செவிலியர் மற்றும் நோயாளிகள் அலறியடித்து ஓடினார்.

இதுகுறித்து கிடைத்த தகவலின்படி, மின் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மின் இணைப்பை துண்டித்துனர். தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இதனையடுத்து புறநோயாளிகள் மருத்துவமனைக்குள் சென்றனர். இதனால், சிறிது நேரம் அரசு மருத்துவமனை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X