பொது செய்தி

தமிழ்நாடு

பழங்குடியினருக்கான இலவச வீடு; பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை

Added : மே 04, 2021
Share
Advertisement
கூடலுார் : கூடலுாரில், பழங்குடியினருக்கான இலவச வீடுகளை பருவமழைக்கு முன் நிறைவு செய்ய ஆர்.டி.ஓ., அறிவுறுத்தினர்.கூடலுார் நகராட்சியில், குடிசை மாற்று வாரியம் சார்பில், பழங்குடியினருக்கு, 225 இலவச வீடுகள் கட்டி கொடுக்கும் பணி, கூடலுார் நகராட்சி மூலம் நடந்து வருகிறது. அதில், 212 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள வீடுகளின் பணிகளை விரைந்து முடித்து ஒப்படைக்க

கூடலுார் : கூடலுாரில், பழங்குடியினருக்கான இலவச வீடுகளை பருவமழைக்கு முன் நிறைவு செய்ய ஆர்.டி.ஓ., அறிவுறுத்தினர்.

கூடலுார் நகராட்சியில், குடிசை மாற்று வாரியம் சார்பில், பழங்குடியினருக்கு, 225 இலவச வீடுகள் கட்டி கொடுக்கும் பணி, கூடலுார் நகராட்சி மூலம் நடந்து வருகிறது. அதில், 212 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள வீடுகளின் பணிகளை விரைந்து முடித்து ஒப்படைக்க பழங்குடியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பான, ஆலோசனைக் கூட்டம் கூடலூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது. ஆர்.டி.ஓ., ராஜ்குமார் தலைமை வகித்து பேசுகையில்,''கூடலுார் நகராட்சி பகுதியில், நிலுவையில் உள்ள பழங்குடியினருக்கான இலவச வீடு கட்டும் பணிகளை, பருவமழைக்கு முன் முடிக்க வேண்டும்,'' என்றார். கூட்டத்தில், நகராட்சி கமிஷனர் பாஸ்கரன், நகராட்சி பொறியாளர் பார்த்தசாரதி, ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X