தமிழ்நாடு

மகப்பேறு பிரிவில் டாக்டர் பற்றாக்குறை; அவசர காலங்களில் கர்ப்பிணிகள் அவதி

Added : மே 04, 2021
Share
Advertisement
கூடலுார் : கூடலுார் அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில், சிறப்பு டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கூடலுார் அரசு மருத்துவமனையில், மகப்பேறு பிரிவில், பல ஆண்டுகளாக சிறப்பு டாக்டர் பணியிடங்கள் காலியாக இருந்தது. இதனால், பிரசவத்துக்கு வரும் பெண்களை, அவசர சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வந்தனர்.கடந்த, 2019ல், தலா இரண்டு

கூடலுார் : கூடலுார் அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில், சிறப்பு டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கூடலுார் அரசு மருத்துவமனையில், மகப்பேறு பிரிவில், பல ஆண்டுகளாக சிறப்பு டாக்டர் பணியிடங்கள் காலியாக இருந்தது. இதனால், பிரசவத்துக்கு வரும் பெண்களை, அவசர சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வந்தனர்.கடந்த, 2019ல், தலா இரண்டு மகப்பேறு, மயக்க மருந்து டாக்டர்கள் நியமிக்கப்பட்டனர். பிரசவத்துக்கு வரும் பெண்கள் நிம்மதி அடைந்தனர்.

இந்நிலையில், மயக்க மருந்து டாக்டர்கள் பணி மாறுதல் பெற்று சென்றுவிட, மகப்பேறு டாக்டர்களில் ஒருவர் நீண்ட விடுமுறையில் உள்ளார். ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார்.இதனால், பிரசவத்திற்கு வரும் பெண்களில், அவசர சிகிச்சை தேவை உள்ளவர்கள் ஊட்டிக்கு அனுப்பி வருகின்றனர். இதனால், சில நேரங்களில் பிரச்னை ஏற்படுகிறது.

பொதுமக்கள் கூறுகையில்,'கர்ப்பிணி பெண்களின் சிரமத்தை தவிர்க்க, பிரசவ பிரிவில் காலியாக உள்ள மகப்பேறு டாக்டர், மயக்க மருந்து டாக்டர், குழந்தைகள் நல டாக்டர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X