அரசியல் செய்தி

தமிழ்நாடு

மகளிர் இடஒதுக்கீடு.. கட்சிகள் கொடுத்ததும் ஜெயித்ததும்!

Updated : மே 04, 2021 | Added : மே 04, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
தமிழக சட்டசபைக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, 234 எம்.எல்.ஏ.,க்களில் வெறும் ஐந்து சதவீதம் பேர் மட்டுமே பெண் எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர்.மகளிர் இட ஒதுக்கீட்டை எந்தெந்த கட்சிகள் உண்மையாக ஆதரிக்கின்றன என்பது, அவர்கள் வெளியிடுகின்ற வேட்பாளர் பட்டியலிலேயே தெரிந்து விடும். பெண் உரிமையைப் பற்றிப் பெரிதாகப் பேசும் எந்தக் கட்சியும் தங்கள் கட்சியில் 33 சதவீதம் பேருக்குக்
TN election results, ladies, Political Parties

தமிழக சட்டசபைக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, 234 எம்.எல்.ஏ.,க்களில் வெறும் ஐந்து சதவீதம் பேர் மட்டுமே பெண் எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர்.

மகளிர் இட ஒதுக்கீட்டை எந்தெந்த கட்சிகள் உண்மையாக ஆதரிக்கின்றன என்பது, அவர்கள் வெளியிடுகின்ற வேட்பாளர் பட்டியலிலேயே தெரிந்து விடும். பெண் உரிமையைப் பற்றிப் பெரிதாகப் பேசும் எந்தக் கட்சியும் தங்கள் கட்சியில் 33 சதவீதம் பேருக்குக் கூட சீட் தரவில்லை. ஆனால் தனித்து களம் கண்ட நாம் தமிழர் கட்சி மட்டும், 50 சதவீதம் அதாவது, 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை நிறுத்தியது. இந்தக் கட்சியின் ஒரு வேட்பாளரும் வெற்றிபெறவில்லை.


latest tamil newsதி.மு.க., போட்டியிட்ட, 173 தொகுதிகளில் 12 பெண்களுக்கு மட்டுமே அதாவது ஆறு சதவீதம் மட்டுமே சீட் தரப்பட்டது. அவர்களிலும் ஆறு பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். அ.தி.மு.க., போட்டியிட்ட 171 தொகுதிகளில் எட்டு சதவீதம் அதாவது, 14 தொகுதிகள் மட்டுமே பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. அவர்களில் ஒன்பது பேர் தோல்வியடைந்துள்ளனர். மூவருக்கு மட்டுமே வெற்றி கிட்டியது.

ஆனால் அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ.,கட்சிக்கு ஒதுக்கப்பட்ட, 20 தொகுதிகளில் மூன்று பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அவர்களில் இரண்டு பேர் வெற்றி பெற்றுள்ளனர். தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட, 25 தொகுதிகளில், ஒரே ஒருவருக்கு, அதுவும் சிட்டிங் எம்.எல்.ஏ.,வான விஜயதாரணிக்கு சீட் தரப்பட்டது. அவரும் வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தம், 234 எம்.எல்.ஏ.,க்களில் 12 பேர் மட்டுமே பெண் எம்.எல்.ஏ.,க்களாகவுள்ளனர். இது வெறும் ஐந்து சதவீதம் மட்டுமே. வரும் உள்ளாட்சித் தேர்தலிலாவது முக்கியக் கட்சிகள், பெண்களுக்கு அதிக இடங்களை ஒதுக்க வேண்டுமென்பதே பெண்களின் எதிர்பார்ப்பு.

-நமது சிறப்பு நிருபர்-

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - chennai,இந்தியா
05-மே-202110:25:16 IST Report Abuse
Raja எதிர்பார்த்த படி தேர்தலில் தோற்ற பின்னரும் பிஜேபிக்கு ஆதரவான விஷயங்களை தோண்டி துருவி செய்தியாக வெளியிடப்படுகிறது.
Rate this:
HSR - MUMBAI,இந்தியா
05-மே-202111:31:08 IST Report Abuse
HSRபடிக்காத. போய் முரட்டோலி படி.....
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
04-மே-202114:47:14 IST Report Abuse
sankaseshan திருட்டு திமுகவினர் ஆணாதிக்க வாதிகள் பெண்களை எப்படியெல்லாமோ இழிவு படுத்துவர் பானுமதி படிதாண்டா பத்தினியா,, அடிமீனாட்சி கழட்டடி உன்மூகுதியை , சொன்னது நொண்னா கட்டுமரம் பற்றி சொல்லவேவேண்டாம் பேசினால் எழுதினால் காம ரசம் சொட்டும் , தலைவர்கள் இப்படியென்றால் தொண்டர்கள் 18 அடிபாய்வார்கள் .
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
04-மே-202116:54:46 IST Report Abuse
Malick Rajaஇன்னுமா ..முடியாமல் இருக்கிறது .. அய்யா படம் முடிஞ்சி போச்சி .. போங்கய்யா வெளியிலே...
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
04-மே-202111:52:34 IST Report Abuse
S.Baliah Seer திருமதி.சுப்புலக்ஷ்மி ஜெகதீசன் அவர்களுக்கு சபாநாயகர் ஆகும் வாய்ப்பு இருந்தும், ஒரு 280 -வாக்கு அதை தடுத்துவிட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X