பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்று வளர்க்க முயற்சி; இளைஞர்களுக்கு பாராட்டு

Added : மே 04, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, மரங்கள் வளர்ப்பினை ஊக்கப்படுத்தும் வகையிலும், மறைந்த தலைவர்களை நினைவுப்படுத்தும் வகையிலும் இளைஞர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.பொள்ளாச்சி, போடிபாளையம் இளைஞர்கள் ஒன்றாக இணைந்து, 'பசுமை குரல்' என்ற அமைப்பை உருவாக்கி, 'மரம் நடுதல்' பணியில் ஈடுபட்டுள்ளனர். போடிபாளையம் - குளத்துார் ரோட்டில், 15 மரக்கன்றுகள்
 மரக்கன்று வளர்க்க முயற்சி; இளைஞர்களுக்கு பாராட்டு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, மரங்கள் வளர்ப்பினை ஊக்கப்படுத்தும் வகையிலும், மறைந்த தலைவர்களை நினைவுப்படுத்தும் வகையிலும் இளைஞர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

பொள்ளாச்சி, போடிபாளையம் இளைஞர்கள் ஒன்றாக இணைந்து, 'பசுமை குரல்' என்ற அமைப்பை உருவாக்கி, 'மரம் நடுதல்' பணியில் ஈடுபட்டுள்ளனர். போடிபாளையம் - குளத்துார் ரோட்டில், 15 மரக்கன்றுகள் நடப்பட்டு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அதில், மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம், நடிகர் விவேக், நம்மாழ்வார் உள்ளிட்ட புகைப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு மரக்கன்றின் தடுப்பிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருக்குறள் எழுதப்பட்ட போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன.

இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:ரோட்டின் இருபுறமும், 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 15 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. புங்கன், நாவல், புளிய மரம், அரசு, அசோக மரங்கள், சொர்க்க மற்றும் பூவரச மரக்கன்றுகள் நடப்படுகிறது. அவை முறையாக பராமரிக்கப்படும்.மரக்கன்றுகள் வளர்ப்போடு, மறைந்த தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் நினைவுப்படுத்தும் வகையில், தடுப்புகளில் புகைப்படங்கள் ஒட்டப்படுகிறது.

திருவள்ளுவர் படத்துடன் திருக்குறளும், அதன் விளக்கமும் எழுதப்படும்.ஆக்சிஜன் பயன்பாடு, மரங்கள் பயன்பாடு குறித்து பிளக்ஸ் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்களை இப்பணியில் ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X