பொது செய்தி

தமிழ்நாடு

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தடுப்பூசிகள்

Added : மே 04, 2021
Share
Advertisement
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதும், பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்வதும், நம் கையில் தான் உள்ளது என்பதை, அனைவரும் உணர வேண்டும். பொதுஇடங்களில், கட்டாயம் முக்கவசம் அணிந்து, சமூகவிலகல் கடைபிடிக்க வேண்டும். அதேபோன்று, கொரோனா தடுப்பூசி குறித்த அச்சம் தவிர்த்து, இரண்டு தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். இதனால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, தொற்று
 நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தடுப்பூசிகள்

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதும், பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்வதும், நம் கையில் தான் உள்ளது என்பதை, அனைவரும் உணர வேண்டும். பொதுஇடங்களில், கட்டாயம் முக்கவசம் அணிந்து, சமூகவிலகல் கடைபிடிக்க வேண்டும்.

அதேபோன்று, கொரோனா தடுப்பூசி குறித்த அச்சம் தவிர்த்து, இரண்டு தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். இதனால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, தொற்று பாதிப்பு வீரியத்தை குறைக்கும். மேலும், சத்தான உணவு, மூச்சுப்பயிற்சியால், ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்கின்றனர் டாக்டர்கள். பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலை டாக்டர்கள் அறிவுரையை கேளுங்க...


கொரோனாவை விரட்டும் தடுப்பூசி!


ஒவ்வொருவரும் தனிப்பட்ட பொறுப்பை உணர்ந்து, கொரோனா தொற்று மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் என அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். சத்தான உணவு, நல்ல பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்; அச்சம் கொள்ள வேண்டாம். அனைவரும் தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டும். இரண்டு தடுப்பூசிகளும் தரமானவை. எனவே, எந்த தடுப்பூசி கிடைத்தாலும் போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி போடுவது அவசியம்.
-டாக்டர் என். ராஜ்குமார், வட்டார மருத்துவ அலுவலர், கஞ்சம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம்.


இறப்பை தடுக்கும் தடுப்பூசி!


கொரோனா தொற்றால் ஏற்படும் பாதிப்பில் இருந்து, தடுப்பூசி போட்டுக்கொண்டால் தான் பாதுகாக்க முடியும். தடுப்பூசி என்பது நோயை எதிர்க்கும் சக்தியை, நம் உடலில் இயற்கையாகவே ஏற்படுத்தும். அரசு வழங்கும் இரண்டு தடுப்பூசிகளுமே மிகவும் பாதுகாப்பானது.இது குறித்து எவ்வித அச்சமும் பட தேவையில்லை. ஆனால், ஊசிபோட்டாலும் மிகவும் பாதுகாப்பான முறையில் நடந்து கொள்ள வேண்டும். அலட்சியமாக இருந்தால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, முகக்கவசம் அணிவது, சமூக விலகல் பின்பற்றுவது அவசியம். இரண்டு தவணையில் தடுப்பூசி போடுவதனால் முழுநோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. நாம் ஆரோக்கியமாக வாழ சத்தான உணவுகளை உண்ண வேண்டும்.
- டாக்டர் ஜி. ராஜசேகர்,அரசு மருத்துவமனை, வால்பாறை.


தடுப்பூசி மட்டுமே உயிர்கவசம்!


கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பாதுகாப்பாக இருக்க தடுப்பூசி போட வேண்டுமென மக்களிடம் அதீத விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதால், கொரோனா பாதிப்பு சாதாரண சளி, காய்ச்சலை போலத்தான் பாதிப்பை ஏற்படுத்தும். பெரும் அளவு பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது. நுரையீரல் பாதித்து மூச்சுத்திணறல் ஏற்படாது, உயிரிழப்பு தவிர்க்கப்படும். கொரோனாவில் இருந்து தப்பிக்க, தற்போதைக்கு தடுப்பூசி தான் உயிர்கவசம். இரண்டு 'டோஸ்' தடுப்பூசியும் போட்ட பின், 80 சதவீதத்துக்கும் மேல் நோய் எதிர்ப்புத்திறன் ஏற்படும். 18 வயதுக்கு மேலுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டால், கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.டாக்டர் வை.
-முருகபூபதி,கோட்டூர் அரசு மருத்துவமனை.


கைகொடுக்கும் யோகா பயிற்சி!


உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க யோகா செய்ய வேண்டும். மூச்சு பயிற்சி செய்வதால் சுவாசப் பிரச்னை இருக்காது. யோகா பயிற்சி, மற்றும் நல்ல சுவாசமான காற்று இதயத்தை பலப்படுத்தும்.கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம். கொரோனாவின் பிடியிலிருந்து நம்மை பாதுகாக்க, அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டால் கொரோனா பாதிப்பு ஏற்படாது என்று அர்த்தமல்ல. தடுப்பூசி போட்டுக்கொண்டால், தொற்றின் வீரியம் குறைந்து, நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்த்து போராடும் வல்லமை கொண்ட தடுப்பூசிகளை அனைவரும் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
-டாக்டர் ஆ. கார்த்திகேஷ்,அரசு மருத்துவமனை, வால்பாறை.


தடுப்பூசி பாதுகாப்பானது


இன்றைய சூழ்நிலையில், கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, கொரோனா வைரஸ் கிருமியை எதிர்த்து போராடுகிறது. அனைவரும் தடுப்பூசி போடுவதால், சமூகத்திற்கே நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும். பாதுகாப்பான தடுப்பூசியை அனைவரும் தயக்கமின்றி தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டும். மேலும், பணிபுரியும் இடத்திலும், பொது இடத்திலும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மற்றவர்களை தொட்டு பேசுவதை தவிர்த்து, பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
-டாக்டர் எஸ்.எம். நிதிஸ்,அரசு மருத்துவமனை,வால்பாறை.


வதந்திகளை நம்ப வேண்டாம்!


உடல்வலி, காய்ச்சல், சளி இருந்தால், இது சாதாரணமாக வருவதுதானே என, தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்ளக் கூடாது. உடனடியாக, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். வயதானவர்களுக்கு தொற்று அறிகுறி இருந்தால், மருத்துவமனையில் சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்றவற்றை நுாறு சதவீத அளவில் கடைபிடிக்க வேண்டும். அனைவருக்கும் சுய பாதுகாப்பு அவசியம்.தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம். தடுப்பூசி செலுத்திக் கொள்வது மிகவும் பாதுகாப்பானது. 50 சதவீத அளவிலான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலே நோய்த்தொற்றின் தாக்கம் குறையும்.
-டாக்டர் மு.சுந்தரபாண்டியன்,வட்டார மருத்துவ அலுவலர், குடிமங்கலம்.


அலட்சிய போக்கு கூடாது!


முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், கைகளை அடிக்கடி 'சானிடைசர்' பயன்படுத்தி சுத்தப்படுத்துவதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். தற்போது, கொரோனா குறித்த அச்சம் மக்களிடையே கிடையாது. பலரும், அறிகுறி இருந்தாலும், பரிசோதனை செய்ய முன்வருவதில்லை. இதனால், நோய்த்தொற்று அதிகரிக்கிறது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், குடும்பத்தார் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பரிசோதனை முடிவு தெரியும் வரை, தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அலட்சியப் போக்குடன் இருத்தல் கூடாது. இப்போதைய சூழலில், தடுப்பூசி மட்டுமே தீர்வு. அனைவரும் தடுப்பூசி போட முன்வர வேண்டும்.
- டாக்டர் எஸ்.வனஜா, கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர், உடுமலை.


தடுப்பூசியே பெரிய ஆயுதம்


மக்களிடையே முகக்கவசம் அணியும் பழக்கம் வாடிக்கையாகி வருகிறது. இருப்பினும், தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும். அதேபோல், மார்க்கெட், இறைச்சிக் கடைகளில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும். தொற்றின் சங்கிலியை அறுக்கவே, ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களை தொட்டு போசுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும். வீடு திரும்பினால், கை, கால்களை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும்.தற்போது, கொரோனா பரவலை தடுக்க, தடுப்பூசியே பெரிய ஆயுதம். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். இரு 'டோஸ்' தடுப்பூசி செலுத்தியவர்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர். அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
-டாக்டர் எஸ்.கவுதம், மருத்துவ அலுவலர், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், உடுமலை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X