பொது செய்தி

தமிழ்நாடு

சரியான தகவல் தெரிவிக்காததால் அதிகரிக்கும் கொரோனா தொற்று

Added : மே 04, 2021
Share
Advertisement
ஆனைமலை : கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் போது, சரியான தகவல், மொபைல் எண் கொடுக்காமல் விடுவதால், நோய் பரவலை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது.கோவை மாவட்டம் முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும், 900ம் பேருக்கு மேல் தொற்று உறுதியாகி வருகிறது. இதுவரை, 77 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று பாதித்துள்ளது. இதில், பொள்ளாச்சி பகுதியில், தினமும்,

ஆனைமலை : கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் போது, சரியான தகவல், மொபைல் எண் கொடுக்காமல் விடுவதால், நோய் பரவலை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது.

கோவை மாவட்டம் முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும், 900ம் பேருக்கு மேல் தொற்று உறுதியாகி வருகிறது. இதுவரை, 77 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று பாதித்துள்ளது. இதில், பொள்ளாச்சி பகுதியில், தினமும், 100க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதியாகிறது.கொரோனா அறிகுறிகள் உள்ள பலரும், தொற்று பாதித்துள்ளதா, இல்லையா, என கண்டறிய, அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களுக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில், பலரும் சரியான முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட தகவல்களை தெரிவிக்காததால், கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களை தொடர்பு கொள்ள முடியாமல் சுகாதாரத்துறையினர் திணறுகின்றனர். இதனால், தொற்று பாதிப்பும் அதிகரித்து வருகிறது.

சுகாதாரத்துறையினர் கூறியதாவது:தொற்று பாதிப்பு உறுதியானதும், பாதித்தவர்கள் விபரம் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பப்படும். பரிசோதனை மேற்கொள்ளும் போது, மக்கள் சரியான முகவரி, மொபைல் எண் கொடுத்தால் மட்டுமே, தொற்று பாதிப்பு உறுதியானதும் அவர்கள் வீடுகளை கண்டறிந்து கிருமிநாசினி தெளிக்க முடியும்.மேலும், அவர்களை உடனடியாக மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல முடியும். பலரும் சரியான தகவல் தராமல் விடுவதால், அவர்களை கண்டறிய தாமதம் ஏற்படுகிறது. அவர்கள் வெளியில் நடமாடுவதால் தொற்று பரவல் அதிகரிக்கிறது. இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X