பொது செய்தி

தமிழ்நாடு

பி.ஏ.பி., 3ம் மண்டல பாசனத்திற்கு அணையிலிருந்து நாளை நீர் திறப்பு

Added : மே 04, 2021
Share
Advertisement
உடுமலை : பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனம், இறுதிச்சுற்றுக்கு நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது.பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்திலுள்ள, 94,362 ஏக்கர் நிலங்களுக்கு, ஜன.,11 முதல் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஐந்து சுற்றுக்களில், 9,500 மில்லியன் கன அடி நீர் வழங்கப்பட உள்ளது. நான்கு சுற்றுக்கள் நீர் வழங்கப்பட்டு, கடந்த, 26ம் தேதி, தண்ணீர் நிறுத்தப்பட்டது.தொடர்ந்து, திட்ட தொகுப்பு

உடுமலை : பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனம், இறுதிச்சுற்றுக்கு நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது.

பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்திலுள்ள, 94,362 ஏக்கர் நிலங்களுக்கு, ஜன.,11 முதல் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஐந்து சுற்றுக்களில், 9,500 மில்லியன் கன அடி நீர் வழங்கப்பட உள்ளது. நான்கு சுற்றுக்கள் நீர் வழங்கப்பட்டு, கடந்த, 26ம் தேதி, தண்ணீர் நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து, திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வந்து சேகரிக்கும் பணி நடந்து வந்தது.அணை நீர் மட்டம் உயர்ந்த நிலையில், மூன்றாம் மண்டல பாசன நிலங்களுக்கு, இறுதி சுற்றுக்கு, நாளை தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதிகாரிகள் கூறுகையில்,'3ம் மண்டல பாசனம் இறுதிச்சுற்றுக்கு, நாளை தண்ணீர் திறக்கப்பட்டு, 21 நாட்கள் வழங்கப்பட்டு, பாசன காலம் நிறைவு செய்யப்படும். தொடர்ந்து, காண்டூர் கால்வாய், பிரதான கால்வாய் பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டு, அடுத்த சுற்றுக்கு நீர் திறக்கப்படும்' என்றனர்.

அணை நிலவரம்

திருமூர்த்தி அணையில், நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள, 60 அடியில், 45.81 அடியாக இருந்தது. மொத்த கொள்ளளவான, 1,935.25 மில்லியன் கன அடியில், 1,360.41 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது. நீர் வரத்து வினாடிக்கு, 820 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து, 112 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X