பொது செய்தி

தமிழ்நாடு

பசுமையாக படர்ந்து பாதிக்கும் பார்த்தீனியம்! கட்டுப்படுத்த தேவை சிறப்பு திட்டம்

Added : மே 04, 2021
Share
Advertisement
உடுமலை : விவசாய சாகுபடி மற்றும் மனிதர்களுக்கு அதிகளவு தீங்கு ஏற்படுத்தும், பார்த்தீனிய செடிகளை கட்டுப்படுத்த, வேளாண்துறை வாயிலாக ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை துவக்க வேண்டும்.உடுமலை பகுதியில், பல ஆயிரம் ெஹக்டேரில், விவசாய சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இந்த சாகுபடியில், அதிக செலவு மற்றும் விரயத்தை பார்த்தீனிய செடிகள் ஏற்படுத்துகின்றன.சாகுபடிக்கு இடைவெளி விடப்படும்

உடுமலை : விவசாய சாகுபடி மற்றும் மனிதர்களுக்கு அதிகளவு தீங்கு ஏற்படுத்தும், பார்த்தீனிய செடிகளை கட்டுப்படுத்த, வேளாண்துறை வாயிலாக ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை துவக்க வேண்டும்.

உடுமலை பகுதியில், பல ஆயிரம் ெஹக்டேரில், விவசாய சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இந்த சாகுபடியில், அதிக செலவு மற்றும் விரயத்தை பார்த்தீனிய செடிகள் ஏற்படுத்துகின்றன.சாகுபடிக்கு இடைவெளி விடப்படும் விளைநிலங்கள், ரோட்டோரங்கள், குளங்கள், ஓடைகள், தரிசு நிலங்கள் என அனைத்துப்பகுதிகளையும் ஆக்கிரமித்துள்ள பார்த்தீனிய செடிகளால், சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது.

பார்த்தீனிய செடிகளை அகற்ற, சில ஆண்டுகளுக்கு முன், உள்ளாட்சி நிர்வாகங்கள் வாயிலாக, அரசு நடவடிக்கை எடுத்தது. ரோட்டோரங்களில், இருந்த பார்த்தீனிய செடிகளை ஆட்களை கொண்டு அகற்றி, அங்கு, களைக்கொல்லி தெளிக்கப்பட்டது. பின்னர், இத்திட்டம் கைவிடப்பட்டது.பருவமழைக்குப்பின்னர், செடிகளின் வளர்ச்சி அனைத்து பகுதிகளிலும் அதிகளவு உள்ளது. பார்த்தீனிய செடியில், ஒவ்வொரு பூங்கொத்திலும், நான்கு விதைகள் காணப்படும்.

இவ்விதைகள் நான்கே வாரத்தில், நிலத்தில் விழுந்து, மீண்டும் முளைத்து, மீண்டும் பூத்து விதைகளை உற்பத்தி செய்யும் திறன் உடையவை.பார்த்தீனியச்செடிகளை முழுமையாக கட்டுப்படுத்த, உள்ளாட்சி, தன்னார்வ அமைப்புகள், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, பாசன சபைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வண்டுகள் தேவை

பார்த்தீனிய செடிகள் நம் நாட்டில், 1950ம் ஆண்டு கண்டறியப்பட்டு, கடந்த சில ஆண்டுகளில், உலகிலுள்ள ஏழு முக்கிய களைச்செடிகளால் ஒன்றாக மாறியுள்ளது. உயிரியல் முறையில், செடிகளை கட்டுப்படுத்த, மெக்சிகன் வண்டு, முக்கிய பங்கு வகிக்கிறது.இந்த வண்டுகள், சிறிய மற்றும் இளம் செடிகளை மேலிருந்து கீழ் நோக்கி, உண்டு விடும். இது குறித்த விழிப்புணர்வு விவசாயிகளிடையே இல்லை. வண்டுகளை சேகரித்து, பார்த்தீனியம் மிகுந்த பகுதிகளில் விடுவது உட்பட விழிப்புணர்வு பணிகளை ஏற்படுத்துவது செடிகளை கட்டுப்படுத்த ஒரு முக்கிய தீர்வாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X