பொது செய்தி

தமிழ்நாடு

உலக புவி தினத்தில் சுற்றுச்சூழல் சேவை

Added : மே 04, 2021
Share
Advertisement
வால்பாறை : வால்பாறை கேர்.டி., தொண்டு நிறுவனத்தின் சார்பில், உலக புவி தினத்தையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர் முருகன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றில், சுற்றுலா பயணிகள் வீசிச் சென்ற கழிவுகளை தொண்டு நிறுவனத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அப்புறப்படுத்தினர்.நிகழ்ச்சியில், தொண்டு நிறுவன அமைப்பின்

வால்பாறை : வால்பாறை கேர்.டி., தொண்டு நிறுவனத்தின் சார்பில், உலக புவி தினத்தையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர் முருகன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றில், சுற்றுலா பயணிகள் வீசிச் சென்ற கழிவுகளை தொண்டு நிறுவனத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அப்புறப்படுத்தினர்.நிகழ்ச்சியில், தொண்டு நிறுவன அமைப்பின் வால்பாறை ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்கண்ணன் கலந்து கொண்டு பேசும் போது, 'இயற்கையை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்பதை ஒரு போதும் மறக்க கூடாது.சுற்றுப்பகுதியை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குப்பையை தொட்டியில் மட்டுமே போட வேண்டும். இயற்கை வளத்தை பாதுகாப்பதில் அதிக அளவில் அக்கறை எடுத்து, அதிக மரங்களை நடவு செய்ய வேண்டும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X