பொது செய்தி

தமிழ்நாடு

கொய்யா சாகுபடிக்கு அதிகரிக்கும் ஆர்வம்

Added : மே 04, 2021
Share
Advertisement
உடுமலை : உடுமலை சுற்றுப்பகுதியில், கிணற்றுப்பாசனத்துக்கு, பல்வேறு வகையான சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொள்கின்றனர். அவ்வகையில், சொட்டு நீர் பாசனம் அமைத்து, தனிப்பயிராக, கொய்யா சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.கோடை சீசனில், நாற்றுகளை நடவு செய்தால், தென்மேற்கு பருவமழைக்கு காலத்தில், செடிகள் நன்றாக தழைக்கும். எனவே, தற்போது, பல்வேறு பகுதிகளில், அடர் நடவு முறையில்

உடுமலை : உடுமலை சுற்றுப்பகுதியில், கிணற்றுப்பாசனத்துக்கு, பல்வேறு வகையான சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொள்கின்றனர். அவ்வகையில், சொட்டு நீர் பாசனம் அமைத்து, தனிப்பயிராக, கொய்யா சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.கோடை சீசனில், நாற்றுகளை நடவு செய்தால், தென்மேற்கு பருவமழைக்கு காலத்தில், செடிகள் நன்றாக தழைக்கும். எனவே, தற்போது, பல்வேறு பகுதிகளில், அடர் நடவு முறையில் கொய்யா நடவு செய்யப்படுகிறது.

விவசாயிகள் கூறியதாவது: சொட்டு நீர் பாசனம் அமைத்து, நாற்றுகளை நடவு செய்வதால், வரிசைகளுக்கு இடையே ஊடு பயிர் சாகுபடி செய்யலாம். இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பராமரித்தால், கூடுதல் மகசூல் கிடைக்கும்.வறட்சியைத் தாங்கி வளரும் கொய்யாவுக்கு, சந்தையில், நிலையான விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், நாற்றுகள் நடவு செய்துள்ளோம்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X