பொது செய்தி

தமிழ்நாடு

அடுத்தாண்டு கரும்பு அரவை 2.15 லட்சம் டன் இலக்கு

Added : மே 04, 2021
Share
Advertisement
மடத்துக்குளம் : மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், ஏப்., தொடங்கி செப்., மாதம் வரை ஆண்டுதோறும் அரவைப்பருவமாகும். நடப்பாண்டு அரவை கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.ஒவ்வொரு ஆண்டு கரும்பு அரவைக்கு, பல மாதங்கள் முன்பாகவே இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவது வழக்கம். அடுத்த ஆண்டு அரவைக்கு, இரண்டு லட்சத்து, 15

மடத்துக்குளம் : மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், ஏப்., தொடங்கி செப்., மாதம் வரை ஆண்டுதோறும் அரவைப்பருவமாகும். நடப்பாண்டு அரவை கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டு கரும்பு அரவைக்கு, பல மாதங்கள் முன்பாகவே இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவது வழக்கம். அடுத்த ஆண்டு அரவைக்கு, இரண்டு லட்சத்து, 15 ஆயிரம் டன் கரும்பு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதற்கு, 4,500 ஏக்கர் கன்னி கரும்பும், 1,500 ஏக்கர் கட்டை கரும்பும் தேவை.

இவ்வளவு கரும்புகளை உற்பத்தி செய்ய, ஆலையின் அலுவலர்கள், விவசாயிகளை நேரில் சந்தித்து கரும்பு நடவு செய்து, 2022ம் ஆண்டு அரவைக்கு பதிவு செய்யும்படி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.தற்போது நடவு செய்யும் கரும்பு பயிர் வளர்ச்சிக்காக, அமராவதி அணையில் இருந்து, மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் மாதத்திற்கு, பத்து நாட்கள் கரும்பு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும்படி சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X