பொது செய்தி

தமிழ்நாடு

வீடுகளில் தனிமை கொள்ளும் நோயாளிகள்; பராமரிப்பு பெட்டகம் வழங்க எதிர்பார்ப்பு

Added : மே 04, 2021
Share
Advertisement
உடுமலை : உடுமலையில், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு பராமரிப்பு பெட்டகம் வழங்க வேண்டும்.கடந்தாண்டு, கொரோனா பரவல் அதிகரிக்கப்பட்ட போது, நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள், கோவிட் சென்டர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.அதேநேரம், அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று உறுதியானவர்கள், அவர்களது வீட்டிலேயே

உடுமலை : உடுமலையில், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு பராமரிப்பு பெட்டகம் வழங்க வேண்டும்.

கடந்தாண்டு, கொரோனா பரவல் அதிகரிக்கப்பட்ட போது, நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள், கோவிட் சென்டர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.அதேநேரம், அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று உறுதியானவர்கள், அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.அவ்வகையில், டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்டும், அந்தந்த பகுதி சுகாதார ஆய்வாளர்களால் வீடுகளின் வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டும், நோயாளிகள் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

அப்போது, அவர்களுக்கு, 2,500 ரூபாயில், 14 நாட்களுக்கு, தொகுப்பாக, கொரோனா வீட்டு பராமரிப்பு பெட்டகம் வழங்கப்பட்டது. அதில், ஒரு பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவி, ஒரு டிஜிட்டல் தெர்மா மீட்டர், 14 முகக்கவசம், ஒரு கைகழுவும் சோப்பு, அதிமதுரம் மற்றும் கபசுர குடிநீர் பவுடர் பாக்கெட், 60 அமுக்ரா சூரண மாத்திரை, தலா, 14 எண்ணிக்கையில் வைட்டமின்- 'சி' 'ஜிங்க்' மாத்திரை மற்றும் மல்டி வைட்டமின் மாத்திரை, கோவிட் கையேடு ஆகியவை அடங்கி இருந்தது.

ஆனால், தற்போது, உடுமலையில் வீடுகளில் சிகிச்சை பெறுவோருக்கும் கொரோனா வீட்டு பராமரிப்பு பெட்டகம் வழங்கப்படுவதில்லை.இது குறித்து மக்கள் கூறுகையில், 'வீட்டில் இருந்து சிகிச்சை பெற பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். எனவே, கொரோனா வீட்டு பராமரிப்பு பெட்டகம் வழங்க, சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X