கொரோனாவால் முடங்கிய போட்டிகள்; உற்சாகமின்றி விளையாட்டு வீரர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவால் முடங்கிய போட்டிகள்; உற்சாகமின்றி விளையாட்டு வீரர்கள்

Added : மே 04, 2021
Share
உடுமலை : கொரோனா பரவலால், விளையாட்டுப்போட்டிகள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. விளையாட்டில் ஆர்வம் கொண்ட மாணவர்கள் உற்சாகமின்றி காணப்படுகின்றனர்.விளையாட்டுக்களினால் குழு ஒற்றுமை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, வெற்றி, தோல்வியை ஏற்றுக் கொள்ளும் சகிப்புத்தன்மை, நட்புணர்வு, உற்சாகம் வளருகிறது. அவ்வகையில், மாவட்ட மற்றும் மாநில அளவில், அங்கீகரிக்கப்பட்ட

உடுமலை : கொரோனா பரவலால், விளையாட்டுப்போட்டிகள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. விளையாட்டில் ஆர்வம் கொண்ட மாணவர்கள் உற்சாகமின்றி காணப்படுகின்றனர்.

விளையாட்டுக்களினால் குழு ஒற்றுமை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, வெற்றி, தோல்வியை ஏற்றுக் கொள்ளும் சகிப்புத்தன்மை, நட்புணர்வு, உற்சாகம் வளருகிறது. அவ்வகையில், மாவட்ட மற்றும் மாநில அளவில், அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங்கள் வாயிலாக விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. திறமை வாய்ந்த பலரும், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் வென்று சாதனை படைத்தும் வருகின்றனர்.

இதற்கு, பள்ளி மற்றும் கல்லுாரி அளவிலான விளையாட்டுப்போட்டிகள், அச்சாணியாக அமைகிறது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் விளையாட்டுகளில் ஈடுபட முடியாமல் உள்ளனர். நேரடி வகுப்புகள் ரத்து, விடுமுறை போன்ற காரணமாக, கடந்த பல மாதங்களாக, பள்ளி மற்றும் கல்லுாரிகளில் எந்தவொரு விளையாட்டுப்போட்டியும் நடத்தப்படவில்லை. இது, மாணவ, மாணவியர் இடையேயான விளையாட்டு ஆர்வத்தை குறைத்து வருகிறது.

விளையாட்டு மாணவர்கள் கூறியதாவது:கொரோனா பரவலால், வழக்கம் போல பள்ளி மற்றும் விளையாட்டு விழாவை நடத்தவும், திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கும் தடை ஏற்பட்டுள்ளது. வீட்டில் முடங்கிக் கிடக்கும் மாணவ, மாணவியர் உற்சாகமின்றி காணப்படுகின்றனர்.விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலையில், பயிற்சி மட்டுமே ஆறுதலை தருகிறது. விளையாட்டுப்போட்டி நடத்தப்படாததால் சாதிக்க துடிக்கும் மாணவ, மாணவியர் வேதனையில் உள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X