பொது செய்தி

தமிழ்நாடு

தொற்று பரிசோதனை முடிவு எஸ்.எம்.எஸ்.,சில் எதிர்பார்ப்பு

Added : மே 04, 2021
Share
Advertisement
உடுமலை : உடுமலை அரசு மருத்துவமனை மற்றும் சுற்றுப்பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் சேகரம் செய்யப்படும் சளி மாதிரிகள், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.அங்கு, பி.சி.ஆர்., மையத்தில் பரிசோதனை செய்யப்பட்டு, 'பாசிட்டிவ்' முடிவுகள் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, உடுமலை சுற்றுப்பகுதியில் இருந்து, தினமும், 500க்கும் மேற்பட்ட மாதிரிகள் அனுப்பி

உடுமலை : உடுமலை அரசு மருத்துவமனை மற்றும் சுற்றுப்பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் சேகரம் செய்யப்படும் சளி மாதிரிகள், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.அங்கு, பி.சி.ஆர்., மையத்தில் பரிசோதனை செய்யப்பட்டு, 'பாசிட்டிவ்' முடிவுகள் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, உடுமலை சுற்றுப்பகுதியில் இருந்து, தினமும், 500க்கும் மேற்பட்ட மாதிரிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

'பாசிட்டிவ்' முடிவு தெரிந்தவர்களுக்கு மட்டுமே சுகாதாரத்துறையினர் அழைப்பு விடுக்கின்றனர். பரிசோதனை செய்து கொள்வோரின் மொபைல் எண்ணுக்கு, முடிவைத் தெரிவிக்கும் வகையில் எஸ்.எம்.எஸ்., அனுப்ப, மருத்துவப்பணிகள் துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மக்கள் கூறுகையில், 'கொரோனா பரிசோதனை செய்கையில், 'நெகட்டிவ்' என முடிவு உள்ளவர்களுக்கு தகவல் அளிப்பதில்லை. அவர்களின் மொபைல் எண்ணுக்கும் எஸ்.எம்.எஸ்., வாயிலாக 'நெகட்டிவ்' முடிவையும் தெரிவிக்க வேண்டும். அதில் பரிசோதனை செய்து கொண்டவரின் பெயர், முடிவு விவரம் ஆகியவை இடம்பெறச்செய்ய வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X