15 கிலோ தக்காளி ரூ.140| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

15 கிலோ தக்காளி ரூ.140

Added : மே 04, 2021
Share
பொள்ளாச்சி : பொள்ளாச்சி மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு, சுற்றுப்பகுதியில் விளைவிக்கப்படும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. கடந்த, வாரம் நிலவிய விலையே தொடர்ந்து நீடிக்கும் நிலையில், தக்காளிக்கு மட்டும், 40 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது.நேற்றைய மார்க்கெட் நிலவரப்படி, 15 கிலோ எடையுள்ள ஒரு கூடை தக்காளி - 140 ரூபாய்க்கு விற்பனையானது. தக்காளி

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு, சுற்றுப்பகுதியில் விளைவிக்கப்படும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. கடந்த, வாரம் நிலவிய விலையே தொடர்ந்து நீடிக்கும் நிலையில், தக்காளிக்கு மட்டும், 40 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது.

நேற்றைய மார்க்கெட் நிலவரப்படி, 15 கிலோ எடையுள்ள ஒரு கூடை தக்காளி - 140 ரூபாய்க்கு விற்பனையானது. தக்காளி சாகுபடியாளர்களுக்கு ஓரளவு திருப்தியை கொடுத்துள்ளது. வெண்டைக்காய் கிலோ - 20 ரூபாய், பாகற்காய் - 25, புடலங்காய் - 10, ப.மிளகாய் - 30, பீட்ரூட் - 15, கத்தரிக்காய் வெள்ளை ரகம் - 30, பச்சை ரகம் -15, மல்லித்தழை கட்டு - 25, முள்ளங்கி 25 கிலோ பை - 250 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த வாரத்தில், தக்காளி 100 ரூபாய்க்கு விற்றது. பெரும்பாலான காய்கறிகளின் விலை, கடந்த வார விலையே நீடித்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X