பொது செய்தி

தமிழ்நாடு

வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிங்க! தொற்று இல்லா நகரமாக்க விழிப்புணர்வு

Added : மே 04, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், என, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும், 30க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகிறது. சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்காததால் தொற்று

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், என, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும், 30க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகிறது. சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்காததால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.நகராட்சி, வருவாய்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள், கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி நகரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம், தடுப்பூசி போடுதல், கபசுர குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பணிகளோடு, கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதாரப்பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.பொது இடங்களுக்கு வரும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கடைகளில் கூட்டமாக நிற்காமல் சமுக இடைவெளி பின்பற்ற வேண்டும்.

கடைக்கு வருபவர்களுக்கு கிருமிநாசினி வழங்கி கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள கடைக்காரர்கள் அறிவுறுத்த வேண்டும். சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்.இது குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அனைவரது ஒத்துழைப்பு இருந்தால், தொற்று பாதிப்பு இல்லாத நகரமாக மாற்ற முடியும்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X