பொது செய்தி

தமிழ்நாடு

மூலிகை தேநீர் வினியோகம்; வாசகர் வட்டம் ஏற்பாடு

Added : மே 04, 2021
Share
Advertisement
உடுமலை : உடுமலை கிளை நுாலகத்தில், நுாலக வாசகர் வட்டம் சார்பில் மக்களுக்கு மூலிகை தேநீர் வழங்கப்பட்டதுஉடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழு நேர கிளை நுாலகம் எண் - 2, உடுமலை அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம் சார்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மூலிகை தேநீர் வழங்கினர். நுாலக வளாகத்தில் நடந்த முகாமிற்கு, நுாலக வாசகர் வட்ட துணைத்தலைவர்

உடுமலை : உடுமலை கிளை நுாலகத்தில், நுாலக வாசகர் வட்டம் சார்பில் மக்களுக்கு மூலிகை தேநீர் வழங்கப்பட்டது

உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழு நேர கிளை நுாலகம் எண் - 2, உடுமலை அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம் சார்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மூலிகை தேநீர் வழங்கினர். நுாலக வளாகத்தில் நடந்த முகாமிற்கு, நுாலக வாசகர் வட்ட துணைத்தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார்.நுாலகர் கணேசன், வாசகர் வட்ட பொருளாளர் சிவக்குமார், ஆலோசகர் அய்யப்பன் முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கைமருத்துவ வாழ்வியல் மைய மருத்துவர் ராகவேந்திரசாமி, மூலிகை தேநீர் வழங்கி, தொற்று தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தொடர்ந்து, உழவர் சந்தைக்கு வந்தவர்கள், நகராட்சி சுகாதாரப்பணியாளர்களுக்கும் மூலிகை தேநீர் வழங்கப்பட்டது. உடுமலை அரசு சித்த மருத்துவ மற்றும் இயற்கை மருத்துவ மருத்துவர்களின் வழிகாட்டுதலின்படி, நுாலகத்தில், நாள்தோறும் காலை நேரங்களில், கபசுர குடிநீர் மற்றும் மூலிகை தேநீர் வழங்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X