பொது செய்தி

தமிழ்நாடு

விதிமுறை மீறி எடுத்து செல்லப்படும் மண்; நடவடிக்கை பாயுமா?

Added : மே 04, 2021
Share
Advertisement
மடத்துக்குளம் : மடத்துக்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் கிராவல் மண், சவளை மண் தோண்டி எடுத்துச்செல்வதை வரைமுறைப்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.மடத்துக்குளம், உடுமலை பகுதியில் பல்வேறு கட்டுமானப்பணிகள் மற்றும் ரோடு அமைக்கும் பணிகள் நடக்கிறது. இதற்காக மடத்துக்குளத்தின் பல இடங்களிலிருந்து கிராவல் மண் எடுத்துச்செல்லப்படுகிறது.இது தவிர,

மடத்துக்குளம் : மடத்துக்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் கிராவல் மண், சவளை மண் தோண்டி எடுத்துச்செல்வதை வரைமுறைப்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மடத்துக்குளம், உடுமலை பகுதியில் பல்வேறு கட்டுமானப்பணிகள் மற்றும் ரோடு அமைக்கும் பணிகள் நடக்கிறது. இதற்காக மடத்துக்குளத்தின் பல இடங்களிலிருந்து கிராவல் மண் எடுத்துச்செல்லப்படுகிறது.இது தவிர, நுாற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இதற்கு சவளை மண் கொண்டு செல்லப்படுகிறது. டிப்பர் லாரிகளில் இந்த மண்ணை எடுத்துச் செல்லும்போது அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றுவதால், காற்றில் பறந்து ரோட்டில் பரவி விபத்துகள் ஏற்படுகிறது.

இது தவிர, அரசு விதிமுறைக்கு புறம்பாக விளைநிலங்களில் மண் தோண்டபடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், மண் கொண்டு சென்றதாக, துங்காவி பகுதியில் ஒரு டிப்பர் லாரி சிறைப்பிடிக்கப்பட்டு சிறிது நேரத்திற்குப் பின் விடுவிக்கப்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:ஜோத்தம்பட்டி, மலையாண்டிபட்டிணம், கொமரலிங்கம் உள்ளிட்ட பல இடங்களில் விளை நிலத்திலிருந்து மண் எடுக்கப்படுகிறது. அதிகாரிகள் ஆய்வு செய்து அரசு அனுமதியோடு, விதிமுறைக்கு உட்பட்டு மண் எடுக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதோடு இந்த வாகனங்கள் அதிக வேகத்தில் இயக்கப்படுகிறது. மக்கள் பாதுகாப்பு கருதி, சரக்கு வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவிபொருத்த வேண்டும். மண் காற்றில் பறக்காத படி, மூடி எடுத்துச் செல்ல வேண்டும்.இவ்வாறு, கூறினர்.இதுகுறித்து பெயர் அரசு அலுவலர் கூறுகையில், 'அரசு விதிமுறைக்கு புறம்பாக சில இடங்களில் மண் எடுக்கப்படுகிறது. இதில் அரசியல் தலையீடு காரணமாக எதுவும் செய்ய முடிவதில்லை. உயரதிகாரிகள் தலையிட்டு, கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X