பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனம், ரிஷிவந்தியத்தில் தலா 13 பேர் டிபாசிட் இழப்பு

Added : மே 04, 2021
Share
Advertisement
திண்டிவனம்; திண்டிவனம் (தனி) தொகுதியில் தி.மு.க.,வை தவிர்த்த மற்ற 13 வேட்பாளர்கள் டிபாசிட் இழந்தனர்.திண்டிவனம் தனித்தொகுதியில் தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட அரசியல் மற்றும் சுயேச்சைகள் என 15 பேர் போட்டியிட்டனர். அவர்களில், அ.தி.மு.க., வேட்பாளர் அர்ஜூனன், தி.மு.க., வேட்பாளர் சீத்தாபதிசொக்கலிங்கத்தை விட கூடுதலாக 9,753 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.தொகுதியில் போட்டியிட்டு தோல்வி

திண்டிவனம்; திண்டிவனம் (தனி) தொகுதியில் தி.மு.க.,வை தவிர்த்த மற்ற 13 வேட்பாளர்கள் டிபாசிட் இழந்தனர்.திண்டிவனம் தனித்தொகுதியில் தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட அரசியல் மற்றும் சுயேச்சைகள் என 15 பேர் போட்டியிட்டனர். அவர்களில், அ.தி.மு.க., வேட்பாளர் அர்ஜூனன், தி.மு.க., வேட்பாளர் சீத்தாபதிசொக்கலிங்கத்தை விட கூடுதலாக 9,753 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த வேட்பாளர்களில் தி.மு.க.,வை தவிர்த்து, தே.மு.தி.க., - நாம் தமிழர் கட்சி - மக்கள் நீதி மய்யம் - பி.எஸ்.பி., மற்றும் சுயேச்சைகள் என 13 பேரும் டிபாசிட் தொகையை இழந்தனர்.தியாகதுருகம் ரிஷிவந்தியம் சட்ட சபைத் தொகுதியில் தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட 10 அரசியல் கட்சி வேட்பாளர்கள், 5 சுயேச்சைகள் என மொத்தம் 15 பேர் போட்டியிட்டனர். இவர்களில், தி.மு.க., வசந்தம் கார்த்திகேயன் 1,13,912 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட 14 வேட்பாளர்களில், அ.தி.மு.க., சந்தோஷ் தவிர மற்ற 13 வேட்பாளர்களும், டிபாசிட் இழந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X