திண்டிவனம் தொகுதி எதிர்க்கட்சி வசம்வளர்ச்சி திட்டங்கள் வருவதில் சிக்கல்

Added : மே 04, 2021
Share
Advertisement
திண்டிவனம்; திண்டிவனம் தொகுதி தொடர்ந்து இரண்டாம் முறையாக எதிர்கட்சி வசமாகி உள்ளதால், வளர்ச்சி பணிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திண்டிவனம் (தனி) தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட அர்ஜூனன் வெற்றி பெற்றுள்ளார். இதே தொகுதியில் கடந்த 2016ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட சீத்தாபதிசொக்கலிங்கம் வெற்றி

திண்டிவனம்; திண்டிவனம் தொகுதி தொடர்ந்து இரண்டாம் முறையாக எதிர்கட்சி வசமாகி உள்ளதால், வளர்ச்சி பணிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திண்டிவனம் (தனி) தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட அர்ஜூனன் வெற்றி பெற்றுள்ளார். இதே தொகுதியில் கடந்த 2016ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட சீத்தாபதிசொக்கலிங்கம் வெற்றி பெற்றார்.திண்டிவனம் தொகுதியில் கடந்த தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்ற போது தமிழகத்தில் அ.தி.மு.க., ஆளும் கட்சியாக இருந்தது. தற்போது தொகுதியில் அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ள நிலையில், தி.மு.க., ஆளும் கட்சியாக உள்ளது.திண்டிவனம் தொகுதி தொடர்ந்து எதிர்கட்சி வசமாக இருப்பதால், வளர்ச்சி பணிகளை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கடந்த முறை வெற்றி பெற்ற சீத்தாபதிசொக்கலிங்கம், திண்டிவனத்தின் நீண்ட நாளைய கோரிக்கையான, புதிய பஸ் நிலையத்தை கொண்டு வரவில்லை. தி.மு.க.,எதிர்கட்சியாக இருப்பதால், ஆளுங்கட்சியினர் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்று சீத்தாபதிசொக்கலிங்கம் காரணம் கூறினார். தற்போது அ.தி.மு.க.,வை சேர்ந்த அர்ஜூனன் எதிர்கட்சியை சேர்ந்தவராக இருப்பதால், திண்டிவனத்தில் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா என்ற கேள்விக்குறி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.ஆளுங்கட்சியாக பொறுப்பேற்க உள்ள தி.மு.க., தலைமையிலான அரசு, திண்டிவனம் நகர மக்களின் 20 ஆண்டுகால கோரிக்கையான புதிய பஸ் நிலையத்தை விரைந்து கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் பொது நல விரும்பிகளின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X